Wednesday, 2 March 2022

வெங்கடாசலபதி ஆலயங்கள்


அனைத்து உள்ளங்களுக்கும் இனிய வணக்கங்கள்,

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் வெங்கடாசலபதிக்கு, பல்வேறு பெயர்களில் திருக்கோவில்கள் அமைந்துள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

வெங்கடாசலபதி என்றாலே நம் நினைவுக்கு வருவது, திருப்பதி ஏழுமலையான் கோவில்தான். ஆனால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் வெங்கடாசலபதிக்கு, பல்வேறு பெயர்களில் திருக்கோவில்கள் அமைந்துள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.


தலைமலை

நாமக்கல் மாவட்டத்தில் முசிறியில் இருந்து நாமக்கல் செல்லும் வழித்தடத்தில் மணல்மேடு என்ற ஊர் உள்ளது. இங்கிருந்து வடக்கு திசையில் நீலயாம்பட்டி அடுத்துள்ளது செவிந்தப்பட்டி. இங்குதான் தலைமலை வெங்கடாசலபதி கோவில் இருக்கிறது. மூலவர் பெயர், வெங்கடாசலபதி. தாயார் திருநாமம், ஸ்ரீதேவி-பூதேவி. 850 அடி உயரம் கொண்ட இந்த மலை மீது ஏறிச்செல்ல வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த மலையின் மீதுள்ள கோவிலைச் சுற்றிவர வழி கிடையாது. 


ஆனாலும் சில பக்தர்கள் கோவில் சுவற்றின் மீது ஏறியபடி கோவிலை ஆபத்தாக வலம் வருகிறார்கள். பல்வேறு அரிய வகை மூலிகைகள் கொண்ட மலை என்பதால், அதனைச் சிறப்பிக்கும் வகையில் ‘தலைமலை’ என்று அழைக்கிறார்கள். இத்தல இறைவன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருள்கிறார்.


சாத்தூர்

விருதுநகரில் இருந்து சுமார் 26 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, சாத்தூர். இங்கு பாய்ந்தோடும் ‘வைப்பாறு’ நதியின் வடகரையில் இருக்கிறது, ஸ்ரீதேவி- பூதேவி உடனாய வெங்கடாசலபதி திருக்கோவில். மூலவர் பெயர், வெங்கடாசலபதி. பக்தர்கள் ‘சாத்தூரப்பன்’ என்றும் அழைக்கிறார்கள். எட்டையபுரம் ஜமீன்தார்கள், அந்த காலத்தில் இந்த ஆலயத்தின் மீது ஈடுபாடு கொண்டு, பல திருப்பணிகளைச் செய்திருக்கிறார்கள். 



திருவாரூர் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதர், இந்த ஆலயத்து இறைவனைப் பற்றி பாடியிருக்கிறார். எட்டயபுரத்தில் பிறந்த மகாகவி சுப்பிரமணி பாரதியும் இந்த ஆலய பெருமாளை வழிபட்டதற்கான சான்றுகள் உள்ளன.


சிந்துப்பட்டி

மதுரை அருகே உள்ள திருமங்கலத்தில் இருந்து உசிலம்பட்டி செல்லும் பாதையில் 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, சிந்துப்பட்டி. இங்குள்ள வெங்கடேசப் பெருமாள் ஆலயம், சுமார் ஐநூறு ஆண்டுகள் பழமையானது. விஜயநகர மன்னர்கள் ஆட்சி காலத்தில் இந்த ஆலயம் கட்டப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. 




மூலவர்- வெங்கடேசப் பெருமாள், தாயார்- அலர்மேலுமங்கை. சந்திரகிரி பகுதியில் இருந்து இங்குவந்த நாயக்கர்கள், புளியமரங்கள் அடர்ந்திருந்த இந்தப் பகுதியில், தாங்கள் பூஜை செய்து வந்த மூர்த்திகளை, பெருமாள் உத்தரவுப்படி பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்துள்ளனர். கோவில் கொடிமரத்தில், கருப்பண்ண சுவாமியின் திருவுருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இத்தல பெருமாள், நின்ற கோலத்தில் வீற்றிருந்து அருள்கிறார்.


நன்னகரம்

திருநெல்வேலியில் இருந்து தென்காசி செல்லும் சாலையில் 63 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது, நன்னகரம் என்ற ஊர். இங்கு பிரசன்ன வெங்கடாசலபதி கோவில் அமைந்துள்ளது. மூலவர்- பிரசன்ன வெங்கடாசலபதி, தாயார் - ஸ்ரீதேவி மற்றும் பூதேவி. குலசேகர பாண்டியனின் ஆட்சி காலம் அது.



 அவனது அரசவைக்கு கர்க முனிவர் என்பவர் வந்தார். மன்னன் மனக் குழப்பத்திலும், துயரத்திலும் இருப்பதை அறிந்தவர், ‘துன்பமும், மனக்குழப்பமும் நீங்க, தென்னகம் சென்று திருவேங்கமுடையானுக்கு திருக்கோவில் ஒன்று கட்டு’ என்று உத்தரவிட்டார். அதன்படி மன்னன், நிர்மாணித்ததே இந்த ஆலயம் என்று சொல்லப்படுகிறது.


கிருஷ்ணாபுரம்

திருநெல்வேலியில் இருந்து தென்கிழக்கில் சுமார் 13 கிலோமீட்டர் சென்றால், கிருஷ்ணாபுரம் என்ற ஊர் வரும். தாமிரபரணி ஆற்றின் கரையில் இந்த ஊர் அமைந்துள்ளது. இங்குள்ள வெங்கடாசலபதி கோவிலில், மூலவராக பெருமாள் அருள்பாலிக்கிறார். தாயார் திருநாமம், பத்மாவதி என்பதாகும். 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கருதப்படும் இந்த ஆலயத்திற்கு என்று தல வரலாறு எதுவும் கிடைக்கப்பெறவில்லை. 




இந்த ஆலயத்தின் கல்தூண்கள் அனைத்தும் கலைநயத்துடன் வடிக்கப்பட்டுள்ளன. ஒரு முறை சிற்பி ஒருவர் இந்தப் பகுதிக்கு வந்துள்ளார். அவர் இங்கிருக்கும் பாறைகளில் செந்நிற ரேகைகள் ஓடுவதைக் கண்டு பரவசடைந்து, தன்னுடைய கற்பனையில் பல சிற்பங்களை செதுக்கி, ஆலயத்திற்கு அர்ப்பணித்ததாக கூறப்படுகிறது.


---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பதிவைப் படித்ததற்கு நன்றி!💐💐


#பெருமாள்_கோவில் #கோவில் #கும்பாபிஷேகம் #Temple #Tamil_Nadu_Temple #தலைமலை #கிருஷ்ணாபுரம் #நன்னகரம் #சிந்துப்பட்டி #சாத்தூர்



Old Post


குருவாயூர் ஸ்தலம் பற்றிய 10 சிறப்புகள்

https://guruarull.blogspot.com/2022/02/10.html


தண்டபாணி_பைரவர்

https://guruarull.blogspot.com/2022/02/blog-post_10.html


சிவபெருமான் அணிந்துள்ள ஆபரணங்களின் அறிவியல் ரகசியங்கள்

https://guruarull.blogspot.com/2022/02/blog-post_21.html


திருவண்ணாமலை (அண்ணாமலை) கிரிவலம்

https://guruarull.blogspot.com/2021/09/blog-post_24.html






Friday, 25 February 2022

சிவனின் ஐந்து முகங்கள்

அனைத்து உள்ளங்களுக்கும் இனிய வணக்கங்கள்,

சத்யோஜாதம் ..!!

பிரம்ம தேவன் சிவபெருமானை மேற்கு திசையினை நோக்கி சிவபெருமானை குறித்து தவம் செய்த போது

அழகிய வடிவத் துடன், வெண்மை நிறமான இளையோனாய் பிரம்மன் முன்பு தோன்றினார்.  இந்த முகமே சத்யோஜாதம் எனப்படும்.

சத்யோஜாத முகத்திலிருந்து தோன்றிய ஐந்து முகங்கள்: லிங்கோத்பவர், சுகாசனர், அரிஹரர்,  உமாமகேசர், அர்த்தநாரி




வாமதேவம் ..!!

மீண்டும் பிரம்ம தேவன் வடக்கு திசையினை நோக்கி சிவபெருமானை குறித்து தவம் செய்த போது இறைவன் சிவந்த நிறத்துடன் பாம்பை அணிந்தும், மானும் மழுவும் கைகளி ல் ஏந்தி பிரம்மனுக்கு காட்சி கொடுத்தார்.  இறை வனின் இந்த முகமே வாமதேவம் எனப் படும். 

வாமதேவ முகத்திலிருந்து தோன்றிய ஐந்து முகங்கள்: கங்காதரர், சக்ரவரதர், கஜாந்திகர், சண்டேசானுக்கிரகர், ஏகபாதர்.



தத்புருஷம்..!!

அதன் பிறகு பிரம்ம தேவன் கிழக்கு திசையி னை நோக்கி சிவபெருமானை குறித்து தவம் செய்தார். 

 இறைவன் தங்க நிறத்துடன் பிறை யை சென்னியில் சூடி காட்சி கொடுத்தார்.  இறைவனின் இந்த முகமே தத்புருஷம் எனப்படும்.  

பிரம்மனின் தவத்தால் மகிழ்ந்த இறைவன் உளம் மகிழ்ந்து தனது அழகிய உருவத்திலிருந்து காயத்ரீ தேவியை உண்டாக்கி பிரம்ம தேவனிடம் அளித்தார்.  காயத்ரீயை வணங்கி வருபவர்களுக்கு நரகம் கிடையாது எனவும் வரமளித்தார். 

தத்புருஷ முகத்திலிருந்து தோன்றிய ஐந்து வடிவங்கள்: பிட்சாடனர், காமாரி, காலாரி, சலந்தராரி, திரிபுராரி.



அகோரம்..!!

பிறகு பிரம்மா தெற்கு திசையினை நோக்கி சிவபெருமானை குறித்து தவம் செய்தார். 

 இறைவன் முக்கண் கொண்டவராய் நெருப்பி னையும், வாளினையும் கரத்தில் கொண்டவ ராய் கரிய நிறத்துடன் தோன்றினார்.

 இறைவனின் இந்த முகத்திற்கு அகோரம் என்று பெயர்.

அகோர முகத்திலிருந்து தோன்றிய ஐந்து வடிவங்கள்: கஜசம்ஹாரர், வீரபத்திரர், தக்ஷிணாமூர்த்தி, கிராதமூர்த்தி, நீலகண்டர்.


ஈசானன்..!!

கடைசியாக பிரம்ம தேவன் ஆகாயத்தினை நோக்கி சிவபெருமானை குறித்து தவம் செய்தார். 

இறைவன் சாம்பல் வண்ணத்துடன் முக்கண் கொண்டவராயும், இளமதியை சென்னியில் சூடியவாறும், கோரைப்பற்கள் கொண்ட உருமாய் இரண்டு பெண்களுடன் தோன்றினார். 

இறைவனின் இந்த முகமே ஈசானம் எனப்படும்.  அதில் ஒரு பெண் மாயன் முதல் தேவர்கள் வரை அனைவரையும் ஈன்ற அன்னை ஆவாள். 

மற்றொரு பெண் வெண் தாமரையில் வீற்றிருக்கும் கலைமகள் ஆவாள்.

ஈசான முகத்திலிருந்து தோன்றிய ஐந்து வடி வங்கள்: சோமாஸ்கந்தர், நடராசர், ரிஷபாரூடர்,  கல்யாணசுந்தரர், சந்திரசேகரர்

 "இந்த ஐந்து முகங்களையும் நினைத்து தியானம் செய்தாலும் அல்லது வழிபாடு செய்தாலும் இப்பிறவியில் சகல சுகங்களும் கிட்டி மறு பிறவியில் முக்தியும் கிட்டும் என்பது பிரம்ம தேவனின் வாக்கு ஆகும்"


🔯 🔯 🔯 திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் 🔯 🔯 🔯

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பதிவைப் படித்ததற்கு நன்றி!💐💐


#திருச்சிற்றம்பலம் #சத்யோஜாதம் #வாமதேவம் #தத்புருஷம் #அகோரம் #ஈசானன் #சிவபெருமான்

#tamil_Trending #2022 #Feb #சிவன் 


குருவாயூர் ஸ்தலம் பற்றிய 10 சிறப்புகள்

https://guruarull.blogspot.com/2022/02/10.html

தண்டபாணி_பைரவர்

https://guruarull.blogspot.com/2022/02/blog-post_10.html


சிவபெருமான் அணிந்துள்ள ஆபரணங்களின் அறிவியல் ரகசியங்கள்

https://guruarull.blogspot.com/2022/02/blog-post_21.html


திருவண்ணாமலை (அண்ணாமலை) கிரிவலம்

https://guruarull.blogspot.com/2021/09/blog-post_24.html



Thursday, 24 February 2022

குருவாயூர் ஸ்தலம் பற்றிய 10 சிறப்புகள்

 குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர்



அனைத்து உள்ளங்களுக்கும் இனிய வணக்கங்கள்,

1. குருவாயூரில் உள்ள உன்னி கிருஷ்ணன் எனும் மூலவர் கல்லிலோ வேறு உலோகம் கொண்டோ செய்யப்படவில்லை. பாதாள அஞ்சனம் எனும் கலவையால் செய்யப்பட்டது இச்சிலை.


2. இந்த திருக்கோவிலில் கண்ணன் குழந்தை வடிவில் காட்சி தருகிறார். உருவத்தில் தான் குழந்தை ஆனால் உலகத்தையே தன் வாயில் அடக்கியவன். சித்திரை விஷு,ஓணம் பண்டிகை மற்றும் ஏகாதசி இங்கு முக்கியமான பண்டிகைகள்.


3. குழந்தைக்குப் முதல் முதலாக சோறு ஊட்டும் வைபவம் இங்கு மிகவும் சிறப்பு. இந்த திருக்கோவிலில் இதை செய்தால் அந்த குழந்தை வாழ்நாள் முழுவதும் கண்ணன் திருவருளால் உடல் ஆரோக்கியம் கொண்டு வளரும் என்பது நம்பிக்கை.


4. இந்த திருக்கோவிலில் பக்தர்களால் வழங்கப்பட்ட யானைகள் மிகவும் விஷேசம். அந்த வகையில் பத்மநாபன், கஜ ராஜன், கேசவன் என்று பெயர் கொண்ட யானைகள் வரலாற்றில் இன்றும் சிறப்பு பெற்றவை ஆகும்.


5. இந்த திருக்கோவில் நடை திறப்பின் பொழுது யானைகள் இடம் பெறுகின்றன. திருவிழா காலங்களில் யானைகள் தான் சுவாமியை சுமந்து வரும். அதற்காக யானைகளுக்கு ஓட்ட பந்தயம் நடத்தப்படும். வெற்றி பெரும் யானை தான் சுவாமியை சுமக்கும் பாக்கியம் பெறும்.



6. இந்த திருக்கோவிலில் ஸ்வாமி சன்னதி காலை 3 மணிக்கு திறக்கப்படும். முதல் நாள் அணிந்த மாலைகளுடன் மற்றும் அலங்காரத்துடன் பூஜை நடத்தப்படும். இதனை நிர்மால்ய பூஜை என்பார்கள். பின்னர் திருமஞ்சனம் கண்டு மகிழ்வார் கண்ணன்.


7. நாராயண பட்டத்திரி சமஸ்கிருதத்தில் எழுதிய நூல் மற்றும் பூந்தானம் என்ற மஹான் எழுதிய ஞானப்பானை என்ற மலையாள நூல் இந்த ஸ்தல சிறப்பினை விளக்குகிறது.


8. இந்த ஸ்தலத்தில் உள்ள துலாபாரம் சிறப்பு எண்ணில் அடங்கா. பக்தர்கள் கண்ணனை பிரார்த்தனை செய்து அது நிறைவு பெற்றவுடன் துலாபாரத்தில் பழங்கள், கல்கண்டு , பொருள், காசுகள், போன்ற எடைக்கு எடை காணிக்கை செலுத்தி வருகின்றனர்.


9. குரு பகவானும், வாயு பகவானும் சேர்ந்து உருவாக்கிய ஊர் தான் இந்த சிறப்பு பெற்ற குருவாயூர். கண்ணன் இவர்களுக்கு மதிப்பு அளிக்கும் வகையில் கண்ணன் இந்த ஊருக்கு தனது பெயரை சூட்டிக் கொள்ளாமல், குரு+ வாயு சேர்த்து குருவாயூர் என பெயர் பெற்றது. இந்த புகழ் பெற்ற திருஸ்தலம் கேரளாவில் உள்ள திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.


10. கிருஷ்ணாட்டம் இங்கு மிகவும் சிறப்பு பெற்றவை. இரவு ஸ்வாமி சன்னதி நடை அடைத்த பிறகு தொடங்கி, காலையில் நடை திறப்பிற்கு முன்பும் ஆடி முடிக்கும் ஆட்டமே கிருஷ்ணாட்டம். மயில் பீலியை கொண்டு கிரீடம் செய்து ஆடுவார்கள். இது கண்ணனுக்கு மிகவும் பிடித்த ஆட்டம் ஆகும்.


ஜெய் ஸ்ரீ கிருஷ்ண ஜெய் ஸ்ரீ கிருஷ்ண ஜெய் ஸ்ரீ கிருஷ்ண ஜெய் ஸ்ரீ கிருஷ்ண ஜெய் ஸ்ரீ கிருஷ்ண 

ஜெய் ஸ்ரீ கிருஷ்ண ஜெய் ஸ்ரீ கிருஷ்ண ஜெய் ஸ்ரீ கிருஷ்ண ஜெய் ஸ்ரீ கிருஷ்ண 


---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பதிவைப் படித்ததற்கு நன்றி!💐💐


 

#கிருஷ்ணாட்டம் #குருவாயூர் கோவில் #குருவாயூர்_ஸ்ரீகிருஷ்ணர் #ஸ்ரீகிருஷ்ணர் #Kerala 

தண்டபாணி_பைரவர்

https://guruarull.blogspot.com/2022/02/blog-post_10.html


சிவபெருமான் அணிந்துள்ள ஆபரணங்களின் அறிவியல் ரகசியங்கள்

https://guruarull.blogspot.com/2022/02/blog-post_21.html


திருவண்ணாமலை (அண்ணாமலை) கிரிவலம்

https://guruarull.blogspot.com/2021/09/blog-post_24.html




Monday, 21 February 2022

சிவபெருமான் அணிந்துள்ள ஆபரணங்களின் அறிவியல் ரகசியங்கள்


அனைத்து உள்ளங்களுக்கும் இனிய வணக்கங்கள்,

சிவன் ஒரு மின்சக்தியாலான உருவம் என்று எடுத்துக் கொண்டால் அந்த சித்திரத்தில் வேறு அணிகலன்கள் ஏன் உள்ளது? சிவன் கழுத்தில் ருத்திராட்சம் அணிந்திருக்கிறார் அல்லவா? அதை வெறும் ருத்ராட்சமாக பாராமல் அதில் ஒரு ஆகர்சன சக்தி உள்ளதென எடுத்துக்கொள்ளலாம். ஏனெனில் புவியில் உள்ள எல்லா பொருள்களும் ஒன்றையொன்று ஈர்க்கின்றன. நிறை அதிகமான பொருள் நிறை குறைந்த பொருளை ஈர்க்கும். இரண்டு பொருள்களுக்கு இடையிலான இடைவெளி அதிகமாயினால் இந்த ஈர்ப்பின் வலிமை குறையும். இதனை சர் ஐசக் நியூட்டன் என்ற விஞ்ஞானி கண்டுபிடித்தார். ஆகவே ஒவ்வொரு பொருளுக்குள்ளும் ஆகர்சன சக்தி (Inertial Force) இருப்பது தெளிவாகிறது.


சிவன் கழுத்தில் இருக்கும் ருத்ராட்ச மாலையை விஞ்ஞான கண்ணோட்டத்தில் பார்த்தால் அப்போது அவைகளின் சக்தி ஒன்றுக்கொன்று இழுத்துக்கொண்டிருக்கிறது என்றும், ஒரு ருதிராட்ச காய்க்கும் இன்னொரு ருத்திராட்ச காய்க்கும் உள்ள இடைவெளி குறைவாக இருப்பதால் ஆகர்சன சக்தியை சிவன் அதிகம் பெற்றிருக்கிறார்.



சிவனது நெற்றியில் மூன்று விபூதிப் பட்டைகள் இருக்கின்றன. புருவ மத்தியில் ஒரு போட்டும் வைக்கப்பட்டுள்ளது. விபூதிப் பட்டைகளுக்குக் காரணம் என்ன என்று ஆராய்ந்தால் , விஞ்ஞானக் கண்களுக்கு அது மூன்று கோடுகளாகத் தெரிய வேண்டும். புருவ மத்தியில் உள்ள பொட்டு புள்ளியாகத் தெரிய வேண்டும்.


உலகில் உள்ள எல்லா பொருள்களும் ஒன்றையொன்று இழுக்கின்றன. அந்த ஆகர்ஷன சக்தியின் திசை இடைப்பட்ட இரண்டு பொருள்களுக்கும் செங்குத்தாகஇருக்கும். அப்படி பார்த்தால் பூமி என்ற அதிக நிறையுடைய ஒரு பொருள் , அதன் மேற்ப்பரப்பில் உள்ள ஒரு குறைந்த எடையுடைய பொருளை ஈர்க்கின்றது. அந்த பொருளின் பல பாகங்களில் இருந்தும், பூமியின் மையம் நோக்கி இழுக்கும் கோடுகள் எல்லாம், சமாந்திரக் கோடுகளாக( Equal perpendicular lines) இருக்கும். காரணம் என்ன என்றால் பூமியின் ஆரம் மட்டுமே கிட்டத்தட்ட 6200 கிலோ மீட்டர் ஆகும். பூமியின் ஒட்டுமொத்த ஆகர்ஷன ஈர்ப்பு மேற்ப்பரப்பில் உள்ள பொருளில் ஒரு குறிப்பிட்ட புள்ளி வழியாக செங்குத்தாக செயல்படுகிறது. அதுவே அந்த பொருளின் குருத்துவ கேந்திரம் (Centre of gravity) என்று அழைக்கப்படும்.


சிவன் படத்தில் விபூதி என்று உணர்த்திய அந்த மூன்று கோடுகளும் மூன்று சக்தி நிலைகள்.

1) விழா நிலை

2) விழும் நிலை

3) இடைச்சமநிலை

புருவமத்தியில் உள்ள பொட்டு- குருத்துவ கேந்திர புள்ளி .


சிவன் என்பது ஒரு மகாசக்தியாகும். அச்சக்தி பிரபஞ்சம் முழுவதுமே பரவி இருக்கிறது. அதில் மின்காந்த சக்தி – மின்னல் சக்திகள் ஏராளமாக பரவியுள்ளன. இத்தகைய மஹா சக்தியை, சிவன் என்று மனிதரூபத்தில் சித்தரிக்கும் போது அவருடைய குணங்களையும் சக்திகளையும் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக ஆபரணங்களையும் புலித்தோல் ஆடையையும் சிவனின் உருவத்திற்கு அணிவித்தனர். சிவனிடம் ஆகாசசக்திகள் இருப்பதை புரிந்து கொள்ள மின்சக்தியைப் பற்றிய தெளிவு வேண்டும். அப்போது தான் ஏன் சித்தர்கள் சிவனை ஓர் மின்சார மனிதர் என அழைத்தார்கள் என விளங்கும். உடலில் எப்படி மின்சாரத்தைச் சேர்த்து வைக்க முடியும்? என்ற கேள்விக்கும் விடை காணலாம்.



மின்சாரம் கண்டுபிடிப்பு – வரலாறு:

முதன் முதலாய் 1799-ல் மின்சாரத்தை வோல்டா என்ற இத்தாலி நாட்டை சேர்ந்த விஞ்ஞானி கண்டுபிடித்தார். ஒரு கண்ணாடி பாத்திரத்தில் நீர்த்த கந்தக அமிலம் நிரப்பி அதனுள் ஒரு துத்தநாக தகட்டையும், ஒரு செப்பு தகட்டையும் ஒன்றன்மேல் ஒன்று படாமல் வைக்க வேண்டும். இந்த இரண்டு தகடுகளின் மேல்பகுதியின் வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் நுனிகளை ஒரு செப்புக் கம்பியினால் சேர்த்தால் கம்பியின் வழியாக மின்சார ஓட்டம் உண்டாகிறது.


சித்தர்கள் சிவனை ஓர் மின்சார மனிதர் என அழைக்கக் காரணம், சிவன் சடையில் அணிந்திருப்பது பிறைச் சந்திரன், அது செம்பு. நாகப்பாம்பை அணிந்திருக்கிறார். அது துத்தநாகம். இத்தகு அணிகலன்களை அணிந்திருக்கும் சிவனது உடம்பை பாத்திரமாக வைத்துக் கொண்டால் மின்சாரம் எங்ஙனம் உருவாகும் என புரியும்.


தலைமுடியில் செம்பு:

சிவனை ஓர் உயிருள்ள மனிதராக எண்ணினால், அந்த மனித உடலில் அமிலமும், நீரும் இருப்பது தெரியும். அந்தத் தண்ணீரில் சூரிய ஒளியாகிய எரிபொருள் புகுந்து மனிதன் வாழ்வதற்கான சக்தியை அளிக்கிறது. ரோமத்தில் செம்பு உள்ளது என்று சித்தர் நூல்கள் கூறுகின்றன. சோதனை செய்து பார்த்தால் களிம்பு இல்லாத சுத்த செம்பு முடியில் இருப்பது தெரியும் என போகர் கூறியுள்ளார். இரும்பை சுத்த செம்பாக்கும் வல்லமையுடையது ரோமம்.


சூரிய ஒளியில் இருந்து வரக்கூடிய ஹீலியம் என்ற வாயுவை சுத்தப்படுத்தி சரீரத்துக்குள் அனுப்புவதற்கு தலை முடி உதவி செய்கிறது.பூமியின் ஈர்ப்பு சக்தியில்லாமல் எப்படி ஒருவர் நிற்க முடியும். மனிதர்கள் ஏதோ ஒரு சக்தியின் உதவியால் தான் பூமியில் நிற்க முடியும். ஆனால் தாவரங்கள் தன வேர்கள் பூமியில் பிடித்திருந்ததால் தன்னிச்சையாக நிற்க முடிகிறது. தாவரங்களில் வேரிலுள்ள சக்தி, மனிதனின் தலை முடியிலுள்ள சக்தியை ஒக்கும்.



ஓவியத்தினால் உருவத்தைக் காட்ட இயலும். ஆனால் அவ்வுருவத்தில் உள்ள பொருட்கள் எதனால் ஆக்கப்பட்டவை என்று விளக்க முடியாது. எனினும் ஒரு சில உலோகங்களை நிறம் கொண்டு அடையாளம் காண முடியும்.


சித்த ஓவியர்கள் சிவனுக்கு நாகம் (Zinc- துத்தநாகம்) என்ற உலோகத்தை அணிவிக்க வேண்டியிருந்தது.அதை எப்படி உலகமக்கள் எல்லாரும் உணர்ந்து கொள்வது என யோசித்துப் பார்த்ததும், நாகம்(zinc) என்று தெரிந்து கொள்வதற்காக, உயிருள்ள நாகத்தை (Cobra) உலோக நாகமாக சித்தரித்தார்கள் ஓவிய சித்தர்கள்.


சிவனுக்கு செம்பினால்(Copper) ஆன ஒரு ஆபரணத்தை அணிவிக்க விரும்பிய சித்தர்கள் ஓவியத்தின் வழி இவ்வுலோகம் தான் இது என மக்களுக்கு உணர்த்த சிந்தித்தார்கள். தமிழ் அகராதியில் செம்புக்கு மதி(Moon) என்ற சொல் இருப்பதைக் கண்டனர். செம்பில் களிம்பு என்னும் விஷமான களங்கம் சேர்ந்த்திருக்கிறது. அதுபோலவே சந்திரனிலும்(Moon) களங்கம் இருப்பதை யாவரும் அறிவர். ஆகவே தான் செம்பு என்ற பொருள் கொண்ட பிறைச் சந்திரனை ஆபரணமாக அணிவித்தனர்.


சிவனது சடா முடியில் கங்கையை சித்தரிப்பது ஏன்? சிவன் அதீத சக்தி உடையவர். சக்தி(Energy) என்பதற்கு பெண் என்று ஓர் பொருள் உள்ளது. ஆகவே அந்தப் பெண்ணை, சக்தியின் அம்சமாக சித்திரத்தில் வரைந்தார்கள். சிவனின் சடா முடியில் உள்ள கங்கை என்றழைக்கப்படும் பெண்ணில் இருந்து வருவது சக்தி ஓட்டம் (Flow of energy) ஆகும்.


நம் நாட்டில் அவதரித்த சித்தர்கள் தங்களது சீவனையே சிவனாகக் கண்டார்கள். அந்தச் சீவனாகிய சிவனில் மின் சக்தியைச் சேகரித்துக் கொண்டார்கள். அவர்கள் ஒருவரைத் தொட்டால் மின்சக்தி அவரது உடலில் பாயும் என்பதையும் தெரிந்து இருந்தார்கள்.அதனால் தான் இந்தச் சித்தர்கள், தங்கள் சக்திகள் கால் வழியாக புவிக்கு சென்றுவிடாமல் தடுக்க மரத்தினால் ஆன பாதரட்சை அல்லது பாதக்குறடு அணிந்திருந்தார்கள்.


சித்தர்கள், மகான்கள் எல்லாம், தங்களது பாதத்தை தொட்டு வணங்க யாரையும் அனுமதிக்க மாட்டார்கள். ஏனெனில் பாதங்களின் விரல்கள் வழியாகவும் மின்சக்தி வெளியேறும் தன்மை கொண்டது. அதேபோல் கைவிரல்கள் வழியாகவும் மின்சக்திகள் வெளியே பாயும் அபாயம் உள்ளது. முக்கிய சீடர்களைத்தான் கையால் தலையைத் தொட்டு ஆசீர்வதிப்பார்கள்.


---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

வலைப்பதிவைப் படித்ததற்கு நன்றி!💐💐

 

#சிவபெருமான் #theni #tamil_Trending #News #tamil_Nadu  #ரகசியங்கள்






Old Post:

ஸ்ரீ சரபேஸ்வரர் 108 போற்றி

https://guruarull.blogspot.com/2022/02/108_16.html


தண்டபாணி_பைரவர்

https://guruarull.blogspot.com/2022/02/blog-post_10.html


மகான் அகத்தியர் வாக்கு

https://guruarull.blogspot.com/2021/10/blog-post_31.html




Wednesday, 16 February 2022

ஸ்ரீ சரபேஸ்வரர் 108 போற்றி

அனைத்து உள்ளங்களுக்கும் இனிய வணக்கங்கள்,

ஸ்ரீ சரபேஸ்வரர் ! உலகை காக்க சிவபெருமான்  

எடுத்த உருவம் தான் “சரபேஸ்வரர்”. ஸ்ரீ சரபேஸ்வரரை போற்றும் இந்த 108 போற்றி துதிகளை ஞாயிற்று கிழமையன்று உடல் மன சுத்தி செய்து கொண்டு, எத்தகைய புலால் உணவுகளையும் உண்ணாமல் அந்த தினத்தில் வரும் மாலை 4.30 மணி முதல் 6.00 மணிக்குள்ளான ராகு காலத்தில் சிவன் கோவிலுக்கு சென்று சரபேஸ்வரர் சந்நிதி முன்போ அல்லது சிவபெருமான் சந்நிதி முன்போ விளக்கெண்ணெய் தீபம் ஏற்றி இந்த துதியை மனமார படித்தால் நீங்கள் புது வீடு கட்டுவதில் ஏற்படும் பிரச்சனைகள், தாமதங்கள் நீங்கும். நினைத்த காரியங்கள் நடைபெற தொடங்கும். மனம் மற்றும் செயல்புரிவதில் இருக்கும் தயக்கங்கள் நீங்கி தெளிவு ஏற்படும்.ஹிரண்யகசிபுவை அழிப்பதற்காக புரிவதற்காக மகாவிஷ்ணு எடுத்த அவதாரம் தான் நரசிம்ம அவதாரம். இந்த அவதாரத்தை எடுத்து ஹிரண்யகசிபுவை வதம் செய்த பின்பும் உக்கிரம் தணியாமல் இருந்த நரசிம்மரின் செயலை கண்ட தேவர்கள் எங்கே நரசிம்மர் அத்தனை லோகங்களையும் அழித்து விடுவாரோ என்று பயந்து சிவபெருமானிடம் முறையிட்டனர். 



உடனே யாளி பறவையின் தலையும், சிங்கத்தின் உடலும் கொண்ட சரபேஸ்வரர் உருவம் எடுத்து நரசிம்மரை அரவணைத்து அவரின் உக்கிரத்தை தணித்தார். தீமைகள் அனைத்தையும் போக்க வல்லவர் ஸ்ரீ சரபேஸ்வரர்.

 ஸ்ரீ சரபேஸ்வரர்.திருவடிகள் சரணம் 


சரபேஸ்வரர் 108 போற்றி

1. ஓம் விண்ணவா போற்றி 

2. ஓம் விளங்கு உயர் வீரா போற்றி

3. ஓம் திண்ணவா போற்றி

4. ஓம் அணிமாமலர் பறவை அரசே போற்றி

5. ஓம் ருத்ர அக்னியே போற்றி

6. ஓம் மந்திரத் துதி தேவா போற்றி 

7. ஓம் மாமலை சக்தியே போற்றி 

8. ஓம் சர்வ வியாபியே போற்றி 

9. ஒம் சங்கரா போற்றி 

10. ஓம் காலனுக்கும் காலா போற்றி 

11. ஓம் கருத்தில் நிறைந்தவனே போற்றி 

12. ஓம் பிறவிபயம் அறுத்தவனே போற்றி 

13. ஓம் நிரந்தரமானவனே போற்றி

14. ஓம் நியாயம் தருபவனே போற்றி 

15. ஓம் வீரபத்திரனே போற்றி

16. ஓம் ஆயிரம் நாமம் உடையாய் போற்றி 

17. ஓம் மகாதேவா போற்றி 

18. ஓம் நரசிம்மரை குளிரவைத்தவா போற்றி 

19. ஓம் நான்மறை ஆனாய் போற்றி 

20. ஓம் சூலினி உடனுறை தேவா போற்றி

21. ஓம் அதர்வண காளியை அடைந்தவா போற்றி

22. ஓம் மந்திரம் ஆள்பவனே போற்றி 

23. ஓம் கம்பத்தில் நிற்பவனே போற்றி

24. ஓம் கோபக்கனலேபோற்றி 

25. ஓம் கூர்நகம் கொண்டவனே போற்றி 

26. ஓம் லிங்கப்பதியே போற்றி

27. ஓம் ருத்ரதாண்டவா போற்றி

28. ஓம் சத்திய துணையே போற்றி 

29. ஓம் சாந்தி அருள்பவனே போற்றி 

30. ஓம் சத்திய சாட்சியே போற்றி

31. ஓம் சத்திய உருவே போற்றி 

32. ஓம் முத்தொழில் தலைவா போற்றி

33. ஓம் புவனம் படைத்தாய் போற்றி 

34. ஓம் ஆட்டிப் படைப்பாய் போற்றி 

35. ஓம் அறம் பொருள் இன்பம் அளிப்பாய் போற்றி 

36. ஒம் அம்ருத அரசே போற்றி 

37. ஓம் சித்தர் சிந்தை புகுந்தவனே போற்றி 

38. ஓம் ருத்திர மூர்த்தியே போற்றி 

39. ஓம் காலகாலமாய் இருப்பவனே போற்றி 

40. ஓம் சிந்தாமணியின் ஜீவனே போற்றி

41. ஓம் சித்தாந்த சித்தனே போற்றி 

42. ஓம் பரமாத்மனே போற்றி

43. ஓம் பரப்பிரம்மனே போற்றி

44. ஓம் பரப்பிரம்ம ஜோதியே போற்றி 

45. ஓம் கைலாசவாசா போற்றி 

46. ஓம் திருபுவனேசா போற்றி 

47. ஓம் நடுக்கம் தீர்ப்பாய் போற்றி 

48. ஓம் நம்பினோர் நலம் அருள்வாய் போற்றி

49. ஓம் ஏவல் தீர்ப்பாய் போற்றி 

50. ஓம் சூன்யம் அழிப்பாய் போற்றி





51. ஓம் கொடுமை தீர்ப்பாய் போற்றி 

52. ஓம் எண்ணியது அருள்வாய் போற்றி

53. ஓம் திண்ணிய நெஞ்சம் தருவாய் போற்றி 

54. ஓம் திடமாய் காரியம் செய்ய வைப்பாய் போற்றி 

55. ஓம் தீயவர் தொல்லை தீர்ப்பாய் போற்றி 

56. ஓம் திருவருள் தருவாய் போற்றி 

57. ஓம் வழித்துணையே போற்றி

58. ஓம் எட்டு திசையும் காப்பாய் போற்றி

59. ஓம் நஞ்சை புஞ்சை காப்பாய் போற்றி

60. ஓம் நம்பி வருவோர்க்கு அருள்வாய் போற்றி 

61. ஓம் நமசிவாய திருவே போற்றி 

62. ஓம் சிவ சூரியா போற்றி

63. ஓம் சிவச்சுடரே போற்றி 

64. ஓம் அட்சர காரணனே போற்றி 

65. ஓம் ஆதி சிவனே போற்றி 

66. ஓம் கால பைரவரே போற்றி

67. ஓம் திகம்பரா போற்றி 

68. ஓம் ஆனந்தா போற்றி 

69. ஓம் காலத்தின் வடிவே போற்றி

70. ஓம் காற்றாய் வருவாய் போற்றி

71. ஓம் கர்ப்பம் காப்பவனே போற்றி 

72. ஓம் காத்து கருப்பு அழிப்பாய் போற்றி

73. ஓம் எல்லையில்லா பொருளே போற்றி 

74. ஓம் கல்லாலின் கீழ் அமர்ந்தவனே போற்றி

75. ஓம் வல்லார் வாழ்த்தும் தேவா போற்றி 

76. ஓம் எல்லாமாய் இருப்பவனே போற்றி

77. ஓம் மூல குருவே போற்றி

78. ஓம் தெவிட்டா தேனே போற்றி 

79. ஓம் விளக்கு தீபத்தில் ஒளிர்பவனே போற்றி

80. ஓம் அமரர் படை தலைவா போற்றி

81. ஓம் மான் வைத்தாய் போற்றி 

82. ஓம் மழு தூக்கி சிறந்தாய் போற்றி 

83. ஓம் அழைத்ததும் வருவோனே போற்றி 

84. ஓம் சூலினித்தாயின் சுகத்தோனே போற்றி

85. ஓம் பிரத்யங்கிரா பிராணநாதா போற்றி 

86. ஓம் அம்பலத்தாடும் அரசே போற்றி 

87. ஓம் நகமே ஆயுதமாய் கொண்டாய் போற்றி 

88. ஓம் நலம் தரும் தெய்வமே போற்றி 

89. ஓம் உள்ளத்தில் உறைவாய் போற்றி 

90. ஓம் சிந்தனைக்கினிய செல்வனே போற்றி

91. ஓம் திருவுக்கும் திருவான தெய்வமே போற்றி 

92. ஓம் யாவையும் யாவரும் ஆனாய் போற்றி 

93. ஓம் வேதம் தொழும் வேங்கையே போற்றி 

94. ஓம் வெற்றியை நாடுவோர் உள்ளமே போற்றி 

95. ஓம் நோய் தீர்க்கும் நெடியாய் போற்றி 

96. ஓம் மூலவர்க்கெல்லாம் மூலவா போற்றி 

97. ஓம் மூவர்க்கு முந்திய முதல்வா போற்றி

98. ஓம் முற்றும் துறந்தோர்க்கும் அருள்வாய் போற்றி 

99. ஓம் முக்திக்கு வழி செய்வாய் போற்றி 

100. ஓம் பயம் தீர்க்கும் பரம்பொருளே போற்றி 





101. ஓம் பக்தர் தன் துயர்நீக்கும் ஒளியே போற்றி 

102. ஓம் முக்தர்கள் ஜீவனே போற்றி

103. ஓம் முழுவதுமாய் எம்மைக் காப்பாய் போற்றி 

104. ஓம் அடியார்க்கு அடியவா போற்றி 

105. ஓம் அருட்பெருஞ்ஜோதி அண்ணலே போற்றி 

106. ஓம் வெள்ளிக்கு வாழ்வு தந்தாய் போற்றி 

107. ஓம் குருவுக்கு உரு தந்த உயர்ந்தவா போற்றி 

108. ஓம் பூரண சரபேசா போற்றி! போற்றி!


 ஸ்ரீ சரபேஸ்வரர்.திருவடிகள் சரணம்


---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

வலைப்பதிவைப் படித்ததற்கு நன்றி!💐💐💐


#சரபேஸ்வரர் #போற்றி #துதி #சிவபெருமான்



Old Post: 

https://guruarull.blogspot.com/2022/02/108.html

https://guruarull.blogspot.com/2021/10/blog-post_29.html



Thursday, 10 February 2022

தண்டபாணி_பைரவர்

 

அனைத்து உள்ளங்களுக்கும் இனிய வணக்கங்கள்,

காசியிலேயே பாவம் செய்பவர்கள் இருக்கிறார்கள். காசியில் சுற்றித்திரியும் போதும், பாவ எண்ணங்களுடன் திரிபவர்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் வாழ்வில் முக்தியே கிடைக்காதபடி செய்து விடுவார் தண்டபாணி பைரவர். காசியில் இரண்டு பைரவர் கோயில்கள் உண்டு. ஒன்று காலபைரவர் கோயில், இதுமிகவும் பிரசித்தி பெற்றது. ஆனால், இதன் அருகிலுள்ள "தண்டபாணி மந்திரில்' உள்ள தண்டநாயகர் என்னும் தண்டபாணி பைரவர், காசிக்குப் போகிறவர்களைத் தரம்பிரித்து பாவ புண்ணியங்களை வழங்குபவராக உள்ளார்.




குபேரனைத் தலைவராகக் கொண்ட இனத்தவர் யட்சர்கள் எனப்படுவர். இவர்களில் குணபத்திரன் என்பவர் கந்தமாதன பர்வதம் என்ற மலையில் வசித்து வந்தார். இவர் தவமிருந்து பெற்ற பிள்ளை ஹரிகேசவன். இவர் சிறந்த சிவபக்தராகத் திகழ்ந்தார். குணபத்திரன், தன் மகனை தங்கள் குல தலைவரான குபேரனை வழிபடும் படி தூண்டினார்.""ஆஹா! குபேரனா நம் தலைவர்! அவர் சிவபெருமானிடம் இருந்து சகலநிதிகளையும் பெற்று உலகத்திற்கே பொருள் தருபவராயிற்றே! அவரது தயவிருந்தால், அவரே என்னை சிவபெருமானிடம் சேர்த்து விடுவாரே!'' என்று அப்போதும் சிவபெருமானின் பெருமைகளையே பேசினார்.

ஒருநாள், சிவனைக் காண வேண்டும் என்ற உந்துதல் அதிகமானது. அவர் காசியில் வசிக்கிறார் என்பதால், அங்கே செல்ல விரும்பினார் ஹரிகேசவன். வீட்டை விட்டு வெளியேறி வெகுதூரம் சென்று, சிவபெருமானை நினைத்து தவத்தை தொடங்கி விட்டார். உணவு. உறக்கம் மறந்து தியானத்தில் ஆழ்ந்ததால், எலும்பும் தோலுமாகி விட்டார். இத்தகைய பக்தனுக்கு அருள்புரிய வந்தார் சிவபெருமான். ஆழ்ந்த தியானத்தில் இருந்த தன் பக்தனை எழுப்பினார். ஹரிகேசவனால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. அவன் முன்னால் ஒரு பெரிய ஆறு ஓடிக்கொண்டிருந்தது.பக்தர்கள் "ஹரஹர சங்கர, சிவசிவ சங்கர' என்ற கோஷம் எழுப்பியபடி சென்று கொண்டிருந்தனர். அப்போது ரிஷப வாகனத்தில் சிவன் காட்சியளித்தார். ""ஹரிகேசவா! நீ விரும்பியபடியே காசிக்கு வந்துவிட்டாய். உன் தவத்தை மெச்சினேன். உன் விருப்பப்படி இனி காசியிலேயே தங்கியிரு. இவ்வூரே எனக்கும் மிகவும் பிடித்தமானது. உனக்கு ஒரு பணி தருவேன், அதைச் செய்ய வேண்டும்,'' என்றார்.தலையை மட்டும் அசைத்து பதிலேதும் சொல்லாமல், கைகட்டி வாய் பொத்தி நின்ற கேசவனிடம்,""இந்த ஊருக்குள் யார் நுழைந்தாலும் அவர்களைக் கண்காணிக்க வேண்டும். இங்குள்ள எல்லாக் கணங்களுக்கும் நீயே தலைவன். நீயே இங்கு வருவோருக்கு உணவும், நீண்ட ஆயுளும் தர வேண்டும். 

இவ்வுலக வாழ்வு பொய்யானது என்ற ஞானத்தையும் அருளவேண்டும். இனி இந்த காசியின் அதிகாரி நீ தான். இங்கே வருபவர்கள் பாவ சிந்தனையுடன் திரிந்தால், அவர்களை இந்த ஊரை விட்டு வெளியே செல்லும்படியான மனநிலையை உருவாக்க வேண்டும். இங்கே நல்லவர்கள் மட்டுமே தங்க வேண்டும். உன்னை மக்கள் "தண்டபைரவர்' என்பர். உனக்கு தேவ சரீரம் தருகிறேன்,'' என்றார்.


ஹரிகேசவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அப்போது உருவானது தான் "தண்டபாணி மந்திர்'. காசிக்குப் போனால், இந்தக் கோயிலுக்குச் சென்று பிறப்பற்ற நிலையை அடைய வேண்டி வாருங்கள்.


---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

வலைப்பதிவைப் படித்ததற்கு நன்றி!💐💐💐



Thanks for: Google.com

Sunday, 6 February 2022

ரத சப்தமியும் ஏழு எருக்கம் இலை குளியலும் என்ன பயன்கள்

 ரத சப்தமியும் ஏழு எருக்கம் இலை குளியலும் என்ன பயன்கள்?

அனைத்து உள்ளங்களுக்கும் இனிய வணக்கங்கள்,


பிப்ரவரி  07-02-2022 பிலவ வருடம் தை மாதம் 25ம் நாள் திங்கள் கிழமை அஸ்வினி நட்சத்திரம் சப்தமி திதியுடன்  ரத சப்தமி  நிகழ்கிறது


ரத சப்தமி விரதம் சூரிய பகவானை வழிபடும் விரதங்களில் முக்கியமானது ரத சப்தமி விரதமாகும். 

இவ்விரதமானது சூரிய பகவான் தன்னுடைய தட்சினாயன பயணத்தை முடித்துக்கொண்டு, மீண்டும் வட கிழக்கு திசையான உத்திராயண திசையை நோக்கி செலுத்தும் தொடக்க மாதமான தை மாதத்தில் கொண்டாடப்படுகிறது. தை மாத அமாவாசை முடிந்து 7ஆம் நாள் ரத சப்தமி நாளாக கொண்டாடப்படுகிறது.

சூரிய பகவானை வணங்கும் பண்டிகையான ரத சப்தமி நாளை சனிக்கிழமை வழிபடப்படுகிறது. உலகிற்கு ஒளி தரும் சூரிய பகவானுக்கு உரிய விரதங்களில் மிக முக்கியமானது ரத சப்தமி விரதம். தை மாதத்தில் வரும் சப்தமியையே ரத சப்தமி என்று அழைக்கிறார்கள். சூரியன் வட திசை நோக்கி தனது பயணத்தை தொடங்குகிறார். அந்த நாளில் சூரியனுக்கு விசேஷமான ஒளிபிறப்பதாலும், அன்றைய தினத்தில் விரதம் கடைபிடித்து சூரிய பகவானை வழிபட வேண்டும். இந்த தினத்தை சூரிய ஜெயந்தியாகவும் அழைக்கின்றனர். 



வசந்த காலம் ஆரம்பம் 


ஜோதிட நம்பிக்கையின் அடிப்படையில், சூரியன் தனது தெற்கு நோக்கிய பயணத்தை முடித்துக் கொண்டு, மீண்டும் வட திசை நோக்கி பயணிக்கும் உத்தராயண காலத்தின் தொடக்க மாதமான தை மாத சப்தமி தினத்தன்று ரத சப்தமி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. நமது முன்னோர்கள் குறிப்பிட்டுள்ள படி, வசந்த காலத்தின் ஆரம்பமாகவும், அறுவடை காலத்தின் தொடக்கமாகவும் ரத சப்தமி நாள் விளங்குகிறது. ரத சப்தமி என்பது சூரிய பகவான், தனது ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தை வட கிழக்கு திசை நோக்கி செலுத்தும் நாளாக கருதப்படுகிறது.

காலத்தை உருவாக்கும் சூரியன் சூரிய பகவானின் தேரை ஓட்டுபவரின் பெயர் அருணன் என்பவர், மஹாவிஷ்ணுவின் பெரிய திருவடி என பயபக்தியோடு அழைக்கப்படும் கருட பகவானின் சகோதரர் ஆவார். சூரிய பகவான் வலம் வரும் தேரின் சக்கரம் உத்திராயணம், தட்சிணாயனம் என இரண்டு பாகங்களைக் கொண்டது. சூரிய பகவான் தன்னுடைய தேரில் ஏறி வலம் வந்து காலை, நண்பகல், மாலை, அர்த்த ராத்திரி என நான்கு பட்டணங்களை சுற்றி வந்து காலங்களை உருவாக்குகிறார்.


ஏழு குதிரைகள் பூட்டிய தேர் காஷ்யபர் ஆசி வழங்கியது போலவே, பிரகாசமான ஒளியுடன் சூரிய பகவான் மகனாக பிறந்தார். வானவில்லைப் போல ஏழு வண்ணங்கள் கொண்ட ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் பவனி வருகிறார். இந்த ஏழு குதிரைகளும் ஞாயிறு முதல் சனிக்கிழமை வரை உள்ள ஏழு நாட்களைக் குறிக்கிறது. சூரிய பகவான் வலம் வரும் அந்த தேருக்கு ஒரே ஒரு சக்கரம் மட்டுமே உண்டு.


பிச்சை கேட்ட பிராமணர் 


சப்ர ரிஷிகளில் ஒருவரான காஷ்யபர்-அதிதி தம்பதிகளின் மகன் தான் சூரிய பகவான். அதிதி கர்ப்பவதியாக இருந்த போது, ஒரு நாள் காஷ்யபருக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்த போது, யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டு கதவைத் திறக்க, அங்கே ஒரு பிராமணர், ‘தாயே பசிக்கிறது, சாப்பிட ஏதாவது கொடுங்கள்' என்று பிச்சை கேட்க, அதற்கு அதிதி, சற்று இருங்கள் கொண்டு வருகிறேன், என்று சொல்லிவிட்டு நடக்க முடியாமல் மெதுவாக நடந்து வந்து காஷ்யபருக்கு உணவு பரிமாறி அவர் சாப்பிட்ட பின்பு, ஆகாரத்தை எடுத்து வந்து அந்த பிராமணருக்கு கொடுத்தாள்.


சாபமிட்ட பிராமணர்


 தாமதமாக வந்து பிச்சை போட்ட அதிதியைப் பார்த்து பிராமணர், என்னை காக்க வைத்து, தாமதமாக வந்து உணவை அளித்து, ‘என்னை உதாசீனப்படுத்தி விட்டாய். அதனால், உன் வயிற்றில் வளரும் குழந்தை இறப்பான்' என கோபப்பட்டு சாபமிட்டார். பிராமணரின் சாபத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அதிதி, நடந்த விஷயத்தை காஷ்யபரிடம் சொல்ல, அதற்கு அவர், கவலைப்படாதே, அமிர்த உலகில் இருந்து என்றைக்கும் அழிவில்லாத பிரகாசத்துடன் ஒரு மகன் நமக்கு கிடைப்பான், என்று ஆசீர்வதித்தார்.

சப்தம் என்பது வடமொழியில் ஏழு என்று பொருள்படும். அமாவாசைக்கு பிறகான 7வது நாள் சப்தமி திதி ஆகும். உத்திராயண புண்ணிய காலத்தின் தொடக்க மாதமான தை மாதத்தில் வளர்பிறையில் வரும் சப்தமி திதியே, ரத சப்தமி என்று போற்றப்படுகிறது. நாளை பிப்ரவரி 1ஆம் தேதி சனிக்கிழமையன்று ரத சப்தமி கடைபிடிக்கப்படுகிறது. 



ரத சப்தமி அன்றுதான் சூரியன் வட திசையில் இருந்து ஆறு மாத காலத்திற்கு உலகிற்கு ஒளி தருவார். ரத சப்தமி நாளையொட்டி கங்கை உள்ளிட்ட புண்ணிய ஆறுகள், தீர்த்தங்களில் ஏராளமானோர் புனித நீராடி சூரிய பகவானை வழிபடுவார்கள். 


இன்றைய தினம் சூரியன் பயணிக்கும் தேரை இழுத்துச் செல்லும் 7 குதிரைகளும் ஒரு சேர வடக்கு நோக்கி திரும்பி பயணத்தை தொடங்குகின்றன. பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்


 சூரிய உதயத்தில் குளியல் 

ரத சப்தமி நாளில் சூரிய உதயத்திற்கு முன்பு எழுந்து புண்ணிய தீர்த்தங்களுக்கு சென்று நீராடுவது சிறப்பு. அப்படி போக முடியாத சூழ்நிலையில் இயலாதவர்கள் வீட்டில் சூரிய ஒளிபடும் இடத்தில் நின்றபடி குளிக்க வேண்டும். 


ரத சப்தமியன்று காலையில் குளிக்கும்போது சூரியனுக்குப் பிடித்த எருக்க இலைகளை ஏழு எடுத்து அடுக்கி, அதன்மீது அட்சதை வைக்க வேண்டும். ஆண்கள் அதனுடன் விபூதியும், பெண்கள் அதனுடன் மஞ்சள் பொடியும் வைக்க வேண்டும். இந்த இலைகள் அடுக்கைத் தலைமீது வைத்து குளிக்க வேண்டும். நோய்கள் தீரும் 



அதிகாலையில் குளிக்கும் போது எருக்கம் இலைகளை கால்களில் இரண்டு, கண்களில் இரண்டு, தோள் பட்டைகளில் இரண்டு, தலையில் ஒன்று என எருக்கம் இலைகளை வைத்து, தண்ணீர் விட்டுக் கொள்ளவேண்டும். பெண்கள், தலையில் எருக்கம் இலையுடன் மஞ்சள் கலந்த அட்சதையையும் ஆண்கள் அட்சதையை மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும். இப்படிச் செய்வதால், மின்சாரம் எப்படி உலோகக் கம்பி வழியே பாய்கிறதோ, அப்படி சூரியனின் ஏழு வகைக் கதிர்கள் அன்று மட்டும் எருக்கன் இலை வழியே இழுக்கப்பட்டு விரைவில் நம் உடலில் பாய்ந்து, உடல் உபாதைகளையும், நோய்களையும் நீக்குகிறது.

 ஆரோக்கியம் அதிகமாகும் 

புருஷா சூக்தா சூரியனை ஸ்ரீமன்நாராயணன் (சக்ஷோ! சூர்யோ அஜயாதா) கண்களிலிருந்து பிறந்தவர் என்றும், விஷ்ணுவின் அவதாரம் என்று நம்பப்படுகிறது என்றும் விவரிக்கிறார். சூரிய கடவுளை சூர்யா என்று பிரபலமாக பல பெயர்களால் அழைக்கிறார்கள்; 

ஆதித்ய; மித்ரா; ரவி; ச விதா; அர்கா; பாஸ்கர; மரிச்ச; திவாகர; பானு; சாதி, மத வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல் அனைத்து தரப்பு மக்களும் சூரியனை ப்ரத்யக்ஷா தெய்வம் என்று வணங்குகிறார்கள்.


ஸ்ரீ ராமர் சூர்ய வம்சத்தில் பிறந்தார்; இக்ஷ்வாகு வம்சத்தின் குடும்ப தெய்வம் சூரிய கடவுள், ஸ்ரீ சூர்ய நாராயணா. ஸ்ரீ ராமர் ராவணாசுரனைக் கொல்லச் செல்வதற்கு முன்பு சூரியனை வணங்கினார். பாண்டவர்களின் மூத்த சகோதரர் யுதிஷ்டிரா (தர்மராஜா) சூரியனை வணங்கிய பிறகு அக்ஷய கிண்ணத்தைப் பெற்றார். துருவாச முனிவர் அளித்த வரத்தின் காரணமாக கர்ணனைப் பெற்றெடுப்பதற்கு முன்பு பாண்டவர்களின் தாயார் குந்தி தேவி சூரியனை வணங்கினார். சத்ராஜித் (ஸ்ரீ கிருஷ்ணரின் மனைவி சத்தியபாமாவின் தந்தை) சூரிய கடவுளை வணங்கிய பின்னர் சியமந்தக மணிக்கு ஆசீர்வதிக்கப்பட்டார். 


ஸ்ரீ கிருஷ்ணர் மற்றும் ஜம்பவதியின் மகன் சம்பா, சூரியனை வணங்கிய பின்னர் தனது தொழுநோயிலிருந்து விடுபட்டார். இவ்வாறு சூரிய வழிபாட்டைப் பற்றிய பல புராணக் குறிப்புகளைக் காண்கிறோம். ஹனுமான் சூரியக் கடவுளிடமிருந்து வியாகரணத்தைக் கற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. ரத சப்தமியின் இந்த புனித நாளுக்காக பீஷ்மா பிதாமா காத்திருந்தார், ரதா சப்தமி பீஷ்மாஷ்டமி என்று அழைத்த மறுநாளே அவரது இறுதி மூச்சு விட்டார்.

ரத சப்தமியின் சுங்க மற்றும் மரபுகள்…

அர்கா பாத்ராவுடன் குளிப்பது: ரத சப்தமி நாளில் ஒருவர் அருணோதய காலாவின் போது (சூரிய உதயத்திற்கு முன்) ஏழு அர்கா இலைகளுடன் (எண்ணிக்கையில் 7) தலையில் ஒன்றை வைத்து, இரண்டு தோள்கள், முழங்கால்களில் இரண்டு மற்றும் கால்களில் இரண்டு. குளித்த பிறகு அர்ஜியாவை சூரிய கடவுளுக்கு கொடுக்க வேண்டும்....


---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

வலைப்பதிவைப் படித்ததற்கு நன்றி!💐💐💐



Thanks for: Google.com


Visit for:

https://guruarull.blogspot.com/

Thursday, 3 February 2022

பித்ரு மூர்த்திகளுக்கான 108 நாமாவளிகள்

அனைத்து உள்ளங்களுக்கும் இனிய வணக்கங்கள்.

அமாவாசை தினம் மற்றும் நாம் பித்ருக்களை வணங்கும் போது சொல்ல வேண்டிய பித்ரு மூர்த்திகளுக்கான 108 போற்றி நாமாவளிகள் 


1.ஓம் ஸ்ரீ சூரிய நாராயண தேவதா மூர்த்தி போற்றி

2. ஓம் ஸ்ரீ வசுபித்ரு தேவதா மூர்த்திகள் போற்றி

3. ஓம் ஸ்ரீ ருத்ரப் பித்ரு தேவதா மூர்த்திகள் போற்றி

4. ஓம் ஸ்ரீ ஆதித்யப் பித்ரு தேவதா மூர்த்திகள் போற்றி

5. ஓம் ஸ்ரீஜெய க்ஷீராஸ் பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி

6. ஓம் ஸ்ரீதரணி பந்து பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி

7. ஓம் ஸ்ரீ ஸரயு பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி

8. ஓம் ஸ்ரீ கும்ப சோபித பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி

9. ஓம் ஸ்ரீச்ரவண பாத பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி

10.ஓம் ஸ்ரீ ருத்ர தரணி பந்து பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி




11. ஓம் ஸ்ரீவலம்பரப் பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி

12. ஓம் ஸ்ரீதன்வந்த்ரீ லோக சடாட்சர ஸ்ரீவாரி பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி

13. ஓம் ஸ்ரீசுதவாணி பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி

14. ஓம் ஸ்ரீகஜபுஜ பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி

15. ஓம் ஸ்ரீபிரமாம்புல பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி

16. ஓம் ஸ்ரீரீதாம்பரப் பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி

17. ஓம் ஸ்ரீகடாட்ச வாணி பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி

18. ஓம் ஸ்ரீசதவேத பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி

19. ஓம் ஸ்ரீமேத விதான பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி

20. ஓம் ஸ்ரீஸ்கந்த கோஷ்ட பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி


21. ஓம் ஸ்ரீஸ்கந்த லோக பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி

22. ஓம் ஸ்ரீபார்திப ப்ரித்விக் பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி

23. ஓம் ஸ்ரீபருதி பவித்ரப் பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி

24. ஓம் ஸ்ரீகோதாயன பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி

25. ஓம் ஸ்ரீஸ்வர்ண மாதவ பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி

26. ஓம் ஸ்ரீகோமதி லோக கோதாயன பித்ரு தேவதா மூர்த்திகள் போற்றி

27. ஓம் ஸ்ரீமங்கள தேவ பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி

28. ஓம் ஸ்ரீ வரிவஸ்யப் பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி

29. ஓம் ஸ்ரீஹரி கடாட்ச வாணி பித்ரு தேவதா மூர்த்திகள் போற்றி

30. ஓம் ஸ்ரீபகுள சோபித பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி



31.ஓம் ஸ்ரீபூவர்த்தன காயத்ரீ மண்டல பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி

32. ஓம் ஸ்ரீவேதராஜ பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி

33. ஓம் ஸ்ரீஔஷத தண்டுல பித்ரு தேவதா மூர்த்திகள் போற்றி

34. ஓம் ஸ்ரீஔஷத லோகப் பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி

35. ஓம் ஸ்ரீபிரசன்ன பாத பித்ரு தேவதா மூர்த்திகள் போற்றி

36. ஓம் ஸ்ரீபந்து தரணி பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி

37. ஓம் ஸ்ரீகாரணீய பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி

38. ஓம் ஸ்ரீ ச்ராவண பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி

39. ஓம் ஸ்ரீவாமன கண பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி

40. ஓம் ஸ்ரீ சாண்டில்யப் பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி


41. ஓம் ஸ்ரீசந்தான உதக கும்ப பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி

42. ஓம் ஸ்ரீதச பூர்வபித்ருதேவதா மூர்த்திகள் போற்றி

43. ஓம் ஸ்ரீவாயு பித்ரு தேவதேவதா மூர்த்திகள் போற்றி

44. ஓம் ஸ்ரீசூரிய லோக பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி

45. ஓம் ஸ்ரீசாந்த ருத்ர குண பித்ரு தேவதா மூர்த்திகள் போற்றி

46. ஓம் ஸ்ரீஜல த்வீப பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி

47.ஓம் ஸ்ரீசப்த த்வீப பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி

48.ஓம் ஸ்ரீஅஷ்ட சுத பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி

49.ஓம் ஸ்ரீசூரிய வம்ச பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி

50.ஓம் ஸ்ரீக்ஷீர அம்ருத பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி


 51.ஓம் ஸ்ரீ வாதுல்ய தரணிப் பித்ரு தேவதா மூர்த்திகள் போற்றி

52.ஓம் ஸ்ரீஅதிதி லோக பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி

53.ஓம் ஸ்ரீஅங்காரக லோக பித்ரு தேவதா மூர்த்திகள் போற்றி

54.ஓம் ஸ்ரீமார்க விதான பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி

55.ஓம் ஸ்ரீகாச்யப தரண பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி

56.ஓம் ஸ்ரீஜெய மார்த்தாண்ட பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி

57.ஓம் ஸ்ரீமுகுந்தா வர்தன பித்ரு தேவதா மூர்த்திகள் போற்றி

58.ஓம் ஸ்ரீபுரவாஸ பித்ருதேவதைகள் போற்றி

59.ஓம் ஸ்ரீகஜோ புத பித்ருதேவதைகள் போற்றி

60.ஓம் ஸ்ரீபிரகத பித்ருதேவதைகள் போற்றி



61.ஓம் ஸ்ரீதண்டுலப் பித்ருதேவதைகள் போற்றி

62.ஓம் ஸ்ரீசகரப் பித்ருதேவதைகள் போற்றி

63.ஓம் ஸ்ரீபித்ரு அதிகார பூஷண பித்ருதேவதைகள் போற்றி

64.ஓம் ஸ்ரீபித்ரு சண்டேஸ்வரர் தேவதைகள் போற்றி

65.ஓம் ஸ்ரீபித்ரு துவார பாலக தேவதைகள் போற்றி

66.ஓம் ஸ்ரீநாகப் பித்ரு தேவதா மூர்த்திகள் போற்றி

67.ஓம் ஸ்ரீகுசஸ்பதி பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி

68.ஓம் ஸ்ரீசந்தான மாத்ரயப் பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி

69.ஓம் ஸ்ரீபரிபாலய பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி

70.ஓம் ஸ்ரீசந்தன சந்திராதித்ய பித்ரு தேவதா மூர்த்திகள் போற்றி


71.ஓம் ஸ்ரீகல்பித பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி

72.ஓம் ஸ்ரீவாரிலோக பித்ருதேவதா போற்றி

73.ஓம் ஸ்ரீகுரு மஹாதேவ தீர்கதரிசி பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி

74.ஓம் ஸ்ரீஜீவ சௌபாக்ய தீர்கதரிசி பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி

75.ஓம் ஸ்ரீமதுலித முராரி பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி

76.ஓம் ஸ்ரீஆயுஷ்யதன பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி

77.ஓம் ஸ்ரீதிட தீர்க தரிசி பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி

78.ஓம் ஸ்ரீப்ரவேச தீர்கதரிசி பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி

79.ஓம் ஸ்ரீகர்ம பரிபாலன தீர்கதரிசி பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி

80.ஓம் ஸ்ரீகாருண்ய தீர்கதரிசி பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி



81.ஓம் ஸ்ரீதவபர ஔஷத பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி

82.ஓம் ஸ்ரீமாளா சாங்க்ய பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி

83.ஓம் ஸ்ரீஸ்வர்ணவதி பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி

84.ஓம் ஸ்ரீஜல தீப பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி

85.ஓம் ஸ்ரீஜல மண்டல பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி

86.ஓம் ஸ்ரீகடக தேவதை பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி

87.ஓம் ஸ்ரீபவதாரண்ய பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி

88.ஓம் ஸ்ரீபுண்டரீக மண்டல பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி

89.ஓம் ஸ்ரீகாயத்ரீ சவிதா மண்டல பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி

90.ஓம் ஸ்ரீசந்தான உதக கும்ப பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி


91.ஓம் ஸ்ரீசப்த தீப பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி

92.ஓம் ஸ்ரீஅஷ்ட சுத பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி

93.ஓம் ஸ்ரீகாருண்ய பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி

94.ஓம் ஸ்ரீபிரசன்ன பரசத் விக பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி

95.ஓம் ஸ்ரீ கர்த்தம பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி

96.ஓம் ஸ்ரீதரணி பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி

97.ஓம் ஸ்ரீபித்ரு மஹா தேவதைகள் போற்றி

98.ஓம் ஸ்ரீஜெய மாங்கல்ய பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி

99.ஓம் ஸ்ரீஜீவ சௌபாக்ய பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி

100.ஓம் ஸ்ரீவாராஹி வரவாரண பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி



 

101.ஓம் ஸ்ரீபுருஷோத்தம மண்டல பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி

102.ஓம் ஸ்ரீபித்ரு கணதேவதைகளே போற்றி

103.ஓம் ஸ்ரீபித்ரு நட்சத்திர தேவதா மூர்த்திகள் போற்றி

104.ஓம் ஸ்ரீபித்ரு ஹோம தேவதா மூர்த்திகள் போற்றி

105.ஓம் ஸ்ரீபித்ரு யக்ஞ தேவதா மூர்த்திகள் போற்றி

106.ஓம் ஸ்ரீதர்ப்பண தேவதா மூர்த்திகள் போற்றி

107.ஓம் ஸ்ரீபித்ரு தேவக்ரஹங்கள் போற்றி

108.ஓம் ஸ்ரீபித்ருபத்னிகள்தேவதா மூர்த்திகள் போற்றி


ஓம் பித்ருக்கள் ஆசீர்வாதத்தால் நாம் நல்லபடியாக வாழ வேண்டும்.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

வலைப்பதிவைப் படித்ததற்கு நன்றி!💐💐💐



Thanks for: Google.com


Visit for:

https://guruarull.blogspot.com/