Sunday, 31 October 2021

மகான் அகத்தியர் வாக்கு

அனைத்து உள்ளங்களுக்கும் இனிய வணக்கங்கள்.


ஆத்மா உயர் நிலையை அடைய, "செவியை மூடு. 

இறை நாமம் மட்டும் விழட்டும். விழியை மூடு.. 

விழியைத் திறந்தால் அதில் இறை காட்சி மட்டும் தெரியட்டும். 

உள்ளத்தை விசாலமாக்கு அதில் பிற உயிர்களின் கஷ்டத்தை மட்டும் நிரப்பு. அவர்களின் கஷ்டம் தீருவதற்கு உன்னால் முடிந்ததை செய்". இது போதும்.




-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

வலைப்பதிவைப் படித்ததற்கு நன்றி!💐💐💐




ஆஞ்சநேயர் வாக்கு.

https://guruarull.blogspot.com/2021/10/blog-post_20.html





Visit the blog:
https://guruarull.blogspot.com/






Saturday, 30 October 2021

பொடுகு தொல்லை


அனைத்து உள்ளங்களுக்கும் இனிய வணக்கங்கள்.

 பொடுகு தொல்லையை போக்கும் எளிய வழிகள்

கூந்தல் உதிர்வதற்கான பல்வேறு காரணங்களுள் ஒன்று, பொடுகு. சிலருக்கு பொடுகு காரணமாக தலையில் அரிப்பு ஏற்படும்.


இது போன்ற பொடுகு பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்காக, சில இயற்கை மருத்துவ குறிப்புகளை பார்க்கலாம்.


* முதல்நாள் சாதம் வடித்த கஞ்சியை எடுத்து வைத்து, மறுநாள் அதை தலையில் தேய்த்து குளித்தால், பொடுகு நீங்கும்.


* தேங்காய் எண்ணெயில் வெந்தயத்தை சேர்த்துக் காய்ச்சி, தலையில் தேய்த்து வரலாம்.



* தேங்காய் பால் எடுத்த பின் கையை தலையில் நன்றாகத் தேய்த்து, சிறிது நேரம் கழித்து மிதமான நீரில் தலையை அலசினால் பொடுகு, மறைந்து விடும்.





* வாரம் ஒரு முறை, மருதாணி இலையை அரைத்து, சிறிதளவு தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்தால், பொடுகு தொல்லை நீங்கும்.


* தயிர், முட்டையின் வெள்ளைக் கரு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்துக் குளிக்க பொடுகு மறையும்.


* வால் மிளகு தூளுடன் பால் சேர்த்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் ஊறிய பின் குளித்தால், பொடுகு தொல்லை நீங்கும்.


* வெந்தயத்தை தலைக்கு தேய்த்து குளித்தால், உடல் உஷ்ணம் குறைவதுடன் பொடுகு தொல்லை நீங்கும்.


* வசம்பை நன்கு பவுடராக்கி, தேங்காய் எண்ணெய்யில் ஊற வைத்து, அந்த எண்ணெய்யை தலையில் தேய்த்து வந்தால் பொடுகு மறைந்து போகும்.


* வேப்பிலை கொழுந்து, துளசி ஆகியவற்றை நைசாக அரைத்துத் தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.



* எலுமிச்சம் பழச்சாறுடன், தயிர் மற்றும் பச்சை பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து ஷாம்பு போட்டு குளித்தாலும் பொடுகு நீங்கும்.



* தலைக்கு குளிக்கும் போது, கடைசியாக குளிக்கும் தண்ணீரில், வினிகர் கலந்து குளித்தால், பொடுகு நீங்கும்.


* நெல்லிக்காய் தூள், வெந்தயப் பொடி, தயிர் மற்றும் கடலைமாவு கலந்து தலையில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வர பொடுகு நீங்கும்.

_____________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________


இரவு படுக்கப் போகும் முன்:

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.



குறிப்பு:


அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து   உணவாக சாப்பிட்டு வரவும்.


பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும்

வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும்பயன்படுத்தவும்.


---------------------------------------------------------------------------------------------------------------------------------------

வலைப்பதிவைப் படித்ததற்கு நன்றி!💐💐💐


Visit for:

https://guruarull.blogspot.com/





Friday, 29 October 2021

அகத்தியர் போற்றி

 

அனைத்து உள்ளங்களுக்கும் இனிய வணக்கங்கள்.

ஓம் அகத்தியர் பொன்னடி போற்றி !


ஓ அகமே! நின் அருளின்றி என் வினை அருப்பேனோ!

ஓ அகமே! நின் அருளின்றி என் ஆணவம் நீங்குமோ!

ஓ அகமே! நின் அருளின்றி என் அகங்காரம் அழியுமோ!

ஓ அகமே! நின் அருளின்றி என் குரோதம் தீருமோ !

ஓ அகமே! நின் கருணையின்றி என் மோட்ஷம் கிடைக்குமோ!



ஓ அகமே! நீயே எனது குருவாவாய்! 

ஓ அகமே! நீயே எனது வினையும் ஆவாய் ! 

ஓ அகமே! நீயே என் மனம் ஆவாய்!

ஓ அகமே! நீயே எனக்கு எல்லாமும் ஆவாய் !

ஓ அகமே! நீயே எனக்கு அருளவேண்டுகிறேன்!


ஓ அகமே! நினது அருளால் மும்மலம் 

அழியவேண்டுகிறேன்!

ஓ அகமே! நினது அருளால் சித்தம் தெளியவேண்டுகிறேன்!

ஓ அகமே! நினது கருணையினால் என் உள்ளத்தில் கருணை ஒங்க வேண்டுகிறேன் !

ஓ அகமே! உன்னையே சதாகாலம் போற்றும் பாக்கியம் நல்குவாய்!.





ஓ அகமே ! உன்னை போற்றுகின்றேன்! 

ஓ அகமே ! உன்னையே வேண்டுகிறேன் !

ஓ அகமே ! உன்னையே யாசிக்கிறேன்!

ஓ அகமே ! நினதருள் வேண்டுகிறேன்!

ஓ அகமே போற்றி!

---------------------------------------------------------------------------------------------------------------------------------------

வலைப்பதிவைப் படித்ததற்கு நன்றி!💐💐💐



Old Post : அகத்தியர் பதினாறு போற்றிகள்:


https://guruarull.blogspot.com/2021/09/agathiyar.html


Visit for 

https://guruarull.blogspot.com/

Wednesday, 20 October 2021

ஆஞ்சநேயர் வாக்கு.

 கோடகநல்லூர் பற்றி ஆஞ்சநேயர் வாக்கு.



அனைத்து உள்ளங்களுக்கும் இனிய வணக்கங்கள்.

அகத்தியர் அங்கே உங்களில் ஒருவராக முழுநேரமும் கலந்துகொண்டார் அனைவருக்கும் அகத்தியர் கடாட்சம் கிட்டியது.



அகத்தியர் அங்கே உங்களில் ஒருவராக முழுநேரமும் கலந்துகொண்டார் அனைவருக்கும் அகத்தியர் கடாட்சம் கிட்டியது.

 முப்பத்துமுக்கோடி தேவர்கள் மற்றும் எண்பதினாயிரம் ரிஷி மார்களும் பிடித்த இடம் அகத்தியருக்கும் பிடித்த ஸ்தலமாகும்

அன்றைய பூஜையில் முழுநேரமும் அகஸ்தியர் கலந்து கொண்டார்


Visit For:  

https://guruarull.blogspot.com/



Thanks for: 

TUT What's App Group

ஓம் கசவன மௌன ஜோதி

 ஓம் கசவன மௌன ஜோதி நிர்வாண சுவாமியே நமஹ!       


அனைத்து உள்ளங்களுக்கும் இனிய வணக்கங்கள்.

பரப்பிரம்மத்தின் முழு அவதாரமாய், முழுமுதற்பொருளின் மானிட வடிவமாய், சடாமுடியோ, கம்பீரமான தோற்றமோ இல்லாமல், ருத்திராட்சம் அணியாமல், காவி உடுத்தாமல், கமண்டலம் எடுக்காமல் ஏன் கௌபீனம் கூட இல்லாமல் - இயற்கை அன்னை தன்னைப் படைத்த வண்ணமே, ஒரு மாமுனிவர் இப்புண்ணிய பூமியாம் பரத கண்டத்தில் உலகை உய்விக்கும் பொருட்டு அண்மைக்காலத்தில் எழுந்தருளியிருந்தார்கள். அவர்கள் வாழ்ந்த இடம் ஒர் ஏகாந்தமான காடோ, மலையோ, குகையோ அன்று; கங்கை, நர்மதை, காவிரி போன்ற நதித்தீரமும் அன்று; தமிழ்நாட்டில் கசவனம்பட்டி என்னும் குக்கிராமமே அத்திருத்தலமாகும். அவர்கள் ஒர் அவதூதராகவும் (நிர்வாண முனிவர்), மிகவுயர்ந்த ஞானியாகவும், “தலைசிறந்த மனிதர்கள் அமைதியாகவும், மௌனமாகவும், பிறருக்குத் தெரியாமலும் இருக்கிறார்கள்” என்று அருளிச்செய்துள்ள சுவாமி விவேகானந்தரின் கூற்றுக்குக் கண்கண்ட இலக்கணமாகவும் திகழ்ந்தவர்கள்.


திண்டுக்கல் பழனி நெடும் சாலையில் உள்ளதே கசவனம்பட்டி என்ற கிராமம். திண்டுக்கல்லில் இருந்து சுமார் பன்னிரண்டு கிலோ தொலைவில் உள்ள அந்த ஊர் அமைதியானது


ஆன்மீகத்தில் விருப்பமுள்ளவர்களைத் தவிர அதிக மக்கள் அறிந்திராதது அந்த ஊர் . அங்குதான் மாபெரும் சித்தரான ஸ்ரீ மௌன ஜோதி நிர்வாண சுவாமிகளின் சமாதி ஆலயம் உள்ளது.



அவர் எங்கிருந்து வந்தார் என்பதோ, அவருடைய பெற்றோர்கள் யார் என்பதோ எவருக்கும் தெரியவில்லை. ஆனால் அவர் செய்துள்ள மகிமைகள் ஏராளமாம். எந்த உடையுமே அணியாமல் பிறந்த மேனியாகவே திரிந்தார். ஆகவே அவரை தத்தாத்திரேயரைப் போல பிரும்மனின் அவதாரம் என்றே நம்புகிறார்கள். அவர் மீது எவராவது துணியைப் போர்த்தினால் அதை களைந்து எறிவாராம்


பார்த்தால் ஊர் சுற்றித் தெரியும் பைத்தியக்காரனைப் போல காட்சி அளிப்பார். பாம்புகளுடன் விளையாடுவாராம். திடீரென தன்னைத் தானே அடித்துக் கொள்வாராம். அவர் அப்படி செய்தால் எவரோ ஒருவர் அந்த கிராமத்தில் மரணம் அடையப் போகிறார்கள் என்பதைக் காணலாமாம். அவர் எவருடனும் பேசியது இல்லை. ஆகவே அவரை மௌன ஸ்வாமிகள் என அழைத்தனர்


சுமார் அறுபது வயதுவரை வாழ்ந்து இருந்தவரை பற்றி நன்கு தெரிந்திருந்த மக்கள் அவரிடம் சென்று ஆசி பெற்று வணங்கினார்கள். பல ஞானிகள் மற்றும் மகான்கள் கூட தம்மை வந்து பார்த்தவர்களை அவரைச் சென்று பார்க்குமாறு கூறுவார்களாம். அவரை தெருப் பொறுக்கிகள் சீண்டுவது உண்டு. ஆனால் அவர் அனைத்தையும் பொறுத்துக் கொண்டு அமைதியாகவே இருப்பாராம். புன்முறுவல் மட்டுமே அவர்களுக்கு அவர் தந்த பதிலாம்







ஆனால் நாளடைவில் அவர் மெளனமாக செய்து வந்த மகிமைகளை கேட்டும் பார்த்தும் வந்த ஊர் பெரியவர்கள் அவர் பைத்தியம் அல்ல, மாபெரும் மகானே என்பதை உணர்ந்து கொண்டனர். ஆகவே அவர் எந்த இடத்திலாவது தங்க வேண்டும் என்பதை உணர்ந்து கசவனம்பட்டிக்கு அழைத்து வந்துள்ளனர்.





ஊரில் அவர் எந்த வீட்டிலாவது திடீர் என நுழைவாராம் . சமையல் அறைவரை சென்றுவிட்டுத் திரும்பி வருவாராம். அதை எவரும் தவறாக எண்ணியது இல்லை


காரணம் அவர் எந்த வீட்டில் நுழைந்து விட்டுத் திரும்பினாரோ அவர் வீட்டில் நல்லது நடக்கும். அவருக்கு எதிலும் பற்று இருந்தது இல்லை . மிகக் குறைந்த அளவிலேயே சாப்பிடுவார். எப்போதாவது எவராவது வந்து சிகரட்டைத் தந்தால் புகை பிடிப்பார். அதற்குக் காரணம் ஒரு சிகரட்டை புகைக்கும்போதே அந்த சிகரெட்டை கொண்டு தந்தவர்களது துயரங்கள் அவரிடம் சென்று விடும் . அவர் மொழி மௌனம்


அவர் செயல்கள் மௌனத்தில், அவர் மற்றவர்களுடன் பேசியது மௌன மொழியிலேயே. அவரிடம் சென்றவர்களுக்கு அவர் மருந்து தந்தது இல்லை, பிரசாதம் தந்தது இல்லை, மந்திரம் செய்தது இல்லை, போதனைகளையும் செய்தது இல்லை. ஆனால் அவர் முன் சென்று தம் துயரைக் கூறி நின்றால், அவர் அவர்களை ஒரு முறை பார்ப்பார்


அவ்வளவுதான். அல்லது திடீரென வந்தவர்களை எட்டி உதைப்பார், கையில் உள்ளதைக் கொண்டு அடிப்பார் அல்லது ஒரு அறை விடுவார். அடுத்தகணம் அவர்களின் வியாதியின் தன்மை குறைந்துள்ளது போல உணருவார்கள். வந்தவர்கள் திரும்பிச் சென்று விடுவார்கள். சில நாட்களிலேயே அவர்கள் துயரமும் அதன் காரணமும் விலகுவதை உணர்ந்தனர்.


எவர் ஒருவர் சித்தர்களை பற்றி நினைக்கின்றார்களோ அவர்களின் எண்ணம் செயல் அனைத்தும் சித்தர்களுக்கு தெரிந்து விடும். அதன் பிரதிபலிப்பாக பல அருள் நிகழ்வுகள் அவர்களின் வாழ்க்கையில் நடைபெறும்.இப்படியாக மௌனப் புரட்சியினாலேயே பல மக்களுக்கு அருளி வந்த கருணைக்கடல் 1982 ஆம் ஆண்டு சமாதி அடைந்தார்


ஆலயத்தில் அவர் சிவலிங்கமாக இருந்து கொண்டு அங்கு வரும் பக்தர்களைக் கத்து அருளுகின்றாராம். அவரை அடக்கம் செய்த இடத்தின் மீது மழைக் காலமே அற்ற அன்று பெரும் மழை கொட்டியது. வானத்தில் கருடன் ஒன்று அவர் சமாதி மீது மூன்றுமுறை சுற்றிப் பறந்து விட்டுச் சென்றது என்பதே அவருடைய தெய்வீகத்தை பறை சாற்றுவதாக உள்ளது.