Friday, 24 September 2021

அகத்தியர் பதினாறு போற்றிகள் (Agathiyar)

அகத்திய முனிவர்

அனைத்து உள்ளங்களுக்கும் இனிய வணக்கங்கள்.


அகத்தியர் (Agathiyar) என்பவர் சப்தரிஷிகளில் ஒருவராகவும், சித்தர்களில் முதன்மையானவராகவும் அறியப்பெறுகிறார். சிவபெருமானின் திருமணத்தினைக் காண அனைவரும் வடதிசைக்கு வந்தமையால், இவர் தென்திசைக்குப் பயணப்பட்டு அதைச் சமன்செய்ததாகவும், சிவசக்தி திருமணத்தினைத் தமிழகத்திலிருந்து கண்டவராகவும், தமிழைச் சிவபெருமானிடமிருந்து கற்றவரும் ஆவார்.

இவரே அகத்தியம் எனும் முதல் தமிழிலக்கண நூலை எழுதியவர். இந்நூல் கிடைக்கப்பெறவில்லை. அகத்தியம் பற்றிய யாதொரு குறிப்பும் தொல்காப்பியத்தில் எங்கும் குறிக்கப் பெறவில்லை. இவரது மனைவியின் பெயர் லோபாமுத்திரை ஆகும். 




அகத்தியம்

மிகப் பழமையான  தமிழ் இலக்கண நூல் எனக் கருதப்படுகின்றதுஅகத்தியர் என்பவர் இயற்றிய நூலாதலால், இது அகத்தியம் என்று வழங்கப்படுகின்றது. முதல், இடை, கடை என வரையறுக்கப்படும் முச்சங்க காலங்களிலும் இதுவே, தமிழ் இலக்கணத்துக்கான, முதல் நூலாகத் திகழ்ந்தது என்று ஆய்வாளர் கருதுகின்றனர்.



அகத்தியர் பதினாறு போற்றிகள்:

தேவாதி தேவர்களைக் காத்தவரே போற்றி!

சிவசக்திதிருமண தரிசனம் கண்டவரே போற்றி!

தென் திசைவடதிசையைச் சமப்படுத்தியவரே போற்றி!

விந்திய மலையின் அகந்தையை போக்கியவரே போற்றி!   (4)



கும்பத்திலுதித்தக் குறு முனியே போற்றி!

சித்த வைத்திய சிகரமே போற்றி!

சுவேதனின் சாபம் தீர்த்தவரே போற்றி!

இசைஞான ஜோதியே போற்றி!   (8)




உலோப முத்திரையின் பதியே போற்றி!

காவேரி தந்த கருணையே போற்றி!

அகத்தியம் தந்த அருளே போற்றி!

இராமபிரானுக்கு சிவ கீதையருளியவரே போற்றி!    (12)




அசுராசுரர்களை அழித்தவரே போற்றி!

அரும் மருந்துகளை அறிந்தவரே போற்றி!

இசையால் இராவணனை வென்றவரே போற்றி!

இன்னல்கள் போக்கி இன்பம் தரும் அகத்திய பெருமானே போற்றிபோற்றி!   (16)


Thanks for:

www.google.com

https://tut-temples.blogspot.com/

----------------------------------------------------------------------------------------------------------------------------------------

வலைப்பதிவைப் படித்ததற்கு நன்றி!💐💐💐


Visit the blog:

https://guruarull.blogspot.com/

No comments:

Post a Comment