Wednesday, 29 September 2021

பொன்னாங்கண்ணிக் கீரை ரோஜாப் பூ சூரணம்


இன்றைய காய்கறி மருத்துவ சிந்தனை


அனைத்து உள்ளங்களுக்கும் இனிய வணக்கங்கள்.


காயமே (உடலே) மருத்துவர் !!

                    காய்கறிகளே மருந்து !!!


உணவை மருந்தாக்கு !!

            மருந்தை உணவாக்காதே !!!


கீரைகள்  " நடமாடும் சித்தர்கள் " 




தலைப்பு :  நரம்புத் தளர்ச்சியை முற்றிலும் குணப்படுத்த உதவும் சூரணம்


பொன்னாங்கண்ணிக் கீரை ரோஜாப் பூ சூரணம்







தேவையான பொருட்கள்:


பொன்னாங்கண்ணிக் கீரை - 150 கிராம்

ரோஜாப் பூ இதழ்கள்               -    150 கிராம்

செம்பருத்திப் பூ இதழ்கள்.    -  150 கிராம்

ஆவாரம் பூ.             -  150 கிராம்

கொன்றைப் பூ.      -   150 கிராம்




செய்முறை:


முதலில் மேற்கூறிய அளவு பொன்னாங்கண்ணிக் கீரை , ரோஜாப் பூ , செம்பருத்திப் பூ , ஆவாரம் பூ  மற்றும் கொன்றைப் பூ  ஆகியவற்றை எடுத்து நன்கு சுத்தப்படுத்தி மிதமான  வெயிலில்  நன்கு உலர வைக்கவும்.


நன்கு உலர்ந்தப் பின்பு ஒவ்வொன்றையும்  தனித்தனியாக  அரைத்து அனைத்தையும் ஒன்றாகக் கலந்து சலித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.






பயன்கள்:


இந்த சூரணம் நரம்புத் தளர்ச்சி மற்றும் ஆண்மைக் குறைபாடுகளை பூரணமாக தீர்க்க உதவும் அருமருந்தாகும்.


மேற்கூறிய குறைபாடுகளால் துன்பப்படுபவர்கள்  மேற்கூறிய சூரணத்தை ஐந்து கிராம் அளவு எடுத்து  இரவு உணவிற்குப் பிறகு  சுடுநீரில் கலந்து குடிக்கவும்.


இத்துடன் மறக்காமல் ஒரு டம்ளர் அளவு சுடுபால் அருந்த வேண்டும்.


நீங்கள் எடுத்துக் கொண்டியிருக்கிற மருந்துகளோடு இதனை  எடுத்துக் கொள்ளலாம்.





இரவு படுக்கப் போகும் முன்:


வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.






குறிப்பு


அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து   உணவாக சாப்பிட்டு வரவும்.


பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும்

வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும்

பயன்படுத்தவும்.



KOVAI NATURAL CURE

(Natural & Yoga Therapeutic Centre)

FOOD CONSULTANCY  CENTRE


கோவை பாலா ,

இயற்கை மருத்துவம் மற்றும் உணவு வழி(காய்கறி) மருத்துவ ஆலோசகர்.

Cell  :  96557 58609   ,  75503 24609

Email : Covaibala15@gmail.com  

        


Kovai Bala YouTube channel :

https://www.youtube.com/channel/UC8OPbuqkQl4C63ITOCQ1apQ


----------------------------------------------------------------------------------------------------------------------------------------

வலைப்பதிவைப் படித்ததற்கு நன்றி!💐💐💐


Old Posts:


வெண்பூசணிச் சாறு (ஜூஸ்)

https://guruarull.blogspot.com/2021/09/blog-post.html


அன்னாசிப் பழச் சாறு ( ஜூஸ்)

https://guruarull.blogspot.com/2021/09/blog-post_20.html



கேரட் சாறு (ஜூஸ்) இயற்கை பானம்

https://guruarull.blogspot.com/2021/09/blog-post_21.html


அகத்திக் கீரைச் சாறு (ஜூஸ்) இயற்கை பானம்

https://guruarull.blogspot.com/2021/09/blog-post_22.html





Visit For:

https://guruarull.blogspot.com/

 


Monday, 27 September 2021

விநாயகர் போற்றி ( Vinayagar Potri )

விநாயகர் போற்றி



அனைத்து உள்ளங்களுக்கும் இனிய வணக்கங்கள்.


விநாயகர் பிறப்பு பற்றிப் பல்வேறு கதைகள் இருந்தாலும் சிவமகா புராணத்தில் உள்ள கதை பரவலாக அறியப்படுகிறது. அதன்படி முற்காலத்தில் யானை முகம் கொண்ட கஜாசுரன் என்ற அசுரன், சிவபெருமானை நோக்கிப் பல வருடங்களாகக் கடுந்தவம் புரிந்தான். அவரது தவத்தைக் கண்டு மகிழ்ந்த சிவபெருமான் அவனுக்குக் காட்சியளித்து வேண்டிய வரம் கேட்குமாறு கூறுகிறார்



அதற்குக் கஜாசுரன், தன் வயிற்றில் சிவபெருமான் லிங்க வடிவில் தங்கியிருக்க வேண்டும் என்று வரம் கேட்டுப்பெற்றார். இதை அறிந்து கலக்கமடைந்த பார்வதி தேவி, தன் அண்ணன் விஷ்ணுவிடம் உதவி கோரினார்.




பிறகு விஷ்ணு மற்றும் நந்தி ஆகிய இருவரும் தெருக்கூத்து நடத்துபவர்கள் போன்ற உருவம் கொண்டு கஜாசுரனின் அரண்மனைக்கு வந்தனர். நந்தியின் நடனத்தைக் கண்டு மகிழ்ந்த கஜாசுரன், அவர் வேண்டுவதை அளிப்பதாக வாக்களிக்கிறான். அதற்கு நந்தி அவனிடம் சிவபெருமானை விடுவிக்குமாறு கேட்கிறார். கஜாசுரனும் தான் கொடுத்த வாக்கின்படி சிவபெருமானை விடுவித்தான். அவன் சிவபெருமானை நோக்கி பிரபஞ்சத்தில் தன் நினைவு என்றும் அழியாமல் நிலைக்க வேண்டும் என்று வேண்டுகிறான். அதை ஏற்றுக்கொண்ட சிவபெருமான், கஜாசுரனின் யானைத் தலையைக் கொய்து அவரைப் பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியில் இருந்து விடுவிக்கிறார்



மேலும் அவனது யானைத் தோலை உடுத்திக் கொண்டு கஜசம்ஹார மூர்த்தியாகக் காட்சியளித்தார். பிறகுச் சிவபெருமான் தன் வாகனமான நந்தியில் அமர்ந்து கொண்டு கயிலாயம் வருகிறார்.



சிவபெருமான் கயிலாயம் வந்து கொண்டிருப்பதை அறிந்து மகிழ்ந்த பார்வதி, அவரை வரவேற்கும் முன்பு தயாராக நினைத்தார். ஆனால் அப்போது நந்தி இல்லாததால் அங்கு வாயிற்காவலர் யாரும் இருக்கவில்லை. எனவே பார்வதி தாம் குளிக்கும் முன்பு மஞ்சள் விழுதால் ஒரு சிறுவனைச் செய்து அதற்கு உயிர் கொடுத்தார். அவனுக்கு விக்னங்களைத் தீர்ப்பவன் என்ற பொருளில் விநாயகர் என்ற பெயர் சூட்டினார். மேலும் தான் தயாராகி வரும் வரை ஒருவரையும் உள்ளே அனுமதிக்க வேண்டாம் என்று விநாயகரிடம் அறிவுறுத்துகிறார். விநாயகரும் அவ்வாறே செய்வதாக வாக்களிக்கிறான்


பிறகு கயிலாயம் வந்தடைந்த சிவபெருமானை விநாயகர் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் கோபமடைந்த சிவபெருமான் தன் திரிசூலத்தால் விநாயகரின் தலையைக் கொய்தார். பிறகு நடந்நதை அறிந்து கோபம் கொண்ட பார்வதி, பிரபஞ்சத்தையே அழிக்க முடிவெடுத்தார். அவ்வாறு செய்ய வேண்டாம் என்று பிரம்மதேவர் வேண்டிக்கொண்டார். அதற்குப் பார்வதி, விநாயகரை உயிர்த்தெழச் செய்ய வேண்டும் மற்றும் விநாயகரையே அனைவரும் முழுமுதற் கடவுளாக வணங்க வேண்டும் என்று இரு நிபந்தனைகள் விதித்தார்




அதை ஏற்றுக்கொண்ட சிவபெருமான், வடக்கில் தலை வைத்து இறந்த நிலையில் படுத்திருக்குமாறு முதலில் தென்படும் உயிரினத்தின் தலையைக் கொய்து எடுத்து வருமாறு சிவகணங்களை அனுப்பினார். அதன்படி சிவகணங்கள் கஜாசுரனின் தலையுடன் திரும்பி வந்தனர். அதை விநாயகரின் உடலோடு பொருத்தினார் பிரம்மதேவர். பிறகு விநாயகருக்கு உயிரளித்த சிவபெருமான், அவனுக்கு முழுமுதற் கடவுள் என்ற பட்டமும் கணங்களுக்கு அதிபதி என்பதால் கணபதி என்றும் பெயரையும் வழங்கினார்.




விநாயகரை போற்றும் இந்த 108 போற்றி துதிகளை வாரத்தில் எந்த நாட்களிலும் காலை 6 மணியிலிருந்து 9 மணிக்குள்ளாக விநாயகருக்கு விளக்கெண்ணெய் தீபம் ஏற்றி, இந்த 108 துதிகளை மனமொன்றி படிக்க நீங்கள் எண்ணிய காரியங்கள் ஈடேறும். நீங்கள் தொடங்க இருக்கும் எத்தகைய காரியங்களும் தடைகள் தாமதங்கள் இன்றி சிறப்பாக முடியும்.

 




108 விநாயகர் போற்றி:


ஓம் விநாயகனே போற்றி
ஓம் வினைகள் தீர்ப்பவனே போற்றி
ஓம் அரசமரத்தடி அமர்ந்தவனே போற்றி
ஓம் அகந்தை அழிப்பவனே போற்றி

ஓம் அமிர்த கணேசா போற்றி


ஓம் அறுகினில் மகிழ்பவனே போற்றி
ஓம் அச்சம் தவிர்ப்பவனே போற்றி
ஓம் ஆனை முகத்தோனே போற்றி
ஓம் ஆறுமுகன் சோதரணே போற்றி
ஓம் ஆதி மூலமே போற்றி ஓம் ஆனந்த உருவே போற்றி




ஓம் ஆபத் சகாயா போற்றி

ஓம் இமவான் சந்ததியே போற்றி
ஓம் இடரைக் களைவோனே போற்றி
ஓம் ஈசன் மகனே போற்றிஓம் ஈகை உருவே போற்றி



ஓம் உண்மை வடிவே போற்றி
ஓம் உலக நாயகனே போற்றி
ஓம் ஊறும் களிப்பே போற்றி
ஓம் ஊழ்வினை அறுப்பவனே போற்றி
ஓம் எளியவனே போற்றி




ஓம் எந்தையே போற்றி
ஓம் எங்குமிருப்பவனே போற்றி
ஓம் எருக்கு அணிந்தவனே போற்றி
ஓம் ஏழை பங்காளனே போற்றி
ஓம் ஏற்றம் அளிப்பவனே போற்றி

ஓம் ஐயனே போற்றி ஓம் ஐங்கரனே போற்றி
ஓம் ஒப்பிலாதவனே போற்றி
ஓம் ஒதுக்க முடியாதவனே போற்றி
ஓம் ஒளிமய உருவே போற்றி
ஓம் ஒளவைக் கருளியவனே போற்றி






ஓம் கருணாகரனே போற்றி
ஓம் கரணத்தில் மகிழ்பவனே போற்றி
ஓம் கணேசனே போற்றி

ஓம் கணநாயகனே போற்றி
ஓம் கண்ணிற்படுபவனே போற்றி

ஓம் கலியுக நாதனே போற்றி
ஓம் கற்பகத்தருவே போற்றி
ஓம் கந்தனுக்கு தவியவனே போற்றி
ஓம் கிருபாநிதியே போற்றி

ஓம் கீர்த்தி அளிப்பவனே போற்றி






ஓம் குட்டில் மகிழ்பவனே போற்றி
ஓம் குறைகள் தீர்ப்பவனே போற்றி
ஓம் குணநிதியே போற்றி
ஓம் குற்றம் பொறுப்போனே போற்றி

ஓம் கூவிட வருவோய் போற்றி

ஓம் கூத்தன் மகனே போற்றி


ஓம் கொள்ளை கொள்வோனே போற்றி
ஓம் கொழுக்கட்டைப் பிரியனே போற்றி
ஓம் கோனே போற்றி

ஓம் கோவிந்தன் மருமகனே போற்றி

ஓம் சடுதியில் வருபவனே போற்றி

ஓம் சங்கரன் புதல்வனே போற்றி
ஓம் சங்கடஹரனே போற்றி
ஓம் சதுர்த்தி நாயகனே போற்றி
ஓம் சிறிய கண்ணோனே போற்றி
ஓம் சித்தம் கவர்ந்தோனே போற்றி





ஓம் சுருதிப் பொருளே போற்றி

ஓம் சுந்தரவடிவே போற்றி

ஓம் ஞாலம் காப்பவனே போற்றி

ஓம் ஞான முதல்வனே போற்றி
ஓம் தந்தம் உடைந்தவனே போற்றி



ஓம் தந்தத்தாற் எழுதியவனே போற்றி
ஓம் தும்பிக்கை உடையாய் போற்றி
ஓம் துயர் துடைப்பவனே போற்றி
ஓம் தெருவெலாம் காப்பவனே போற்றி
ஓம் தேவாதி தேவனே போற்றி



ஓம் தொந்தி விநாயகனே போற்றி
ஓம் தொழுவோ நாயகனே போற்றி

ஓம் தோணியே போற்றி

ஓம் தோன்றலே போற்றி
ஓம் நம்பியே போற்றி







ஓம் நாதனே போற்றி
ஓம் நீறணிந்தவனே போற்றி
ஓம் நீர்க்கரையமர்ந்தவனே போற்றி
ஓம் பழத்தை வென்றவனே போற்றி
ஓம் பாரதம் எழுதியவனே போற்றி


ஓம் பரம்பொருளே போற்றி
ஓம் பரிபூரணனே போற்றி

ஓம் பிரணவமே போற்றி

ஓம் பிரம்மசாரியே போற்றி
ஓம் பிள்ளையாரே போற்றி



ஓம் பிள்ளையார்பட்டியானே போற்றி
ஓம் பிறவிப்பிணி தீர்ப்பவனே போற்றி
ஓம் பிள்ளைகளை ஈர்ப்பவனே போற்றி
ஓம் புதுமை வடிவே போற்றி
ஓம் புண்ணியனே போற்றி



ஓம் பெரியவனே போற்றி
ஓம் பெரிய உடலோனே போற்றி

ஓம் பேரருளாளனே போற்றி
ஓம் பேதம் அறுப்போனே போற்றி
ஓம் மஞ்சளில் இருப்பவனே போற்றி






ஓம் மகிமையளிப்பவனே போற்றி
ஓம் மகாகணபதியே போற்றி
ஓம் மகேசுவரனே போற்றி
ஓம் முக்குறுணி விநாயகனே போற்றி
ஓம் முதலில் வணங்கப்படுவோனே போற்றி



ஓம் முறக்காதோனே போற்றி
ஓம் முழுமுதற்கடவுளே போற்றி

ஓம் முக்கணன் மகனே போற்றி

ஓம் முக்காலம் அறிந்தானே போற்றி
ஓம் மூத்தோனே போற்றி




ஓம் மூஞ்சுறு வாகனனே போற்றி
ஓம் வல்லப கணபதியே போற்றி
ஓம் வரம்தரு நாயகனே போற்றி
ஓம் விக்னேஸ்வரனே போற்றி
ஓம் வியாஸன் சேவகனே போற்றி
ஓம் விடலைக்காய் ஏற்பவனே போற்றி
ஓம் வெற்றியளிப்பவனே போற்றி



#108_விநாயகர்_போற்றி  #108_விநாயகர் #விநாயகர்

#108_vinayagar_potri 

#tamil_God #Gods_Love


----------------------------------------------------------------------------------------------------------------------------------------

வலைப்பதிவைப் படித்ததற்கு நன்றி!💐💐💐



Old Post : அகத்தியர் பதினாறு போற்றிகள்:

https://guruarull.blogspot.com/2021/09/agathiyar.html


Visit for 

https://guruarull.blogspot.com/



Thanks for 

Google.com