இன்றைய காய்கறி மருத்துவ சிந்தனை
அனைத்து உள்ளங்களுக்கும் இனிய வணக்கங்கள்.
காயமே (உடலே) மருத்துவர் !!
காய்கறிகளே மருந்து !!!
உணவை மருந்தாக்கு !!
மருந்தை உணவாக்காதே !!!
கீரைகள் " நடமாடும் சித்தர்கள் "
தலைப்பு :
வாய்ப் புண் , வாய் துர்நாற்றம் மற்றும் தீராத குடற்புண்ணையும் குணப்படுத்த உதவும் இயற்கை காய்கறி பானம்
அகத்திக் கீரைச் சாறு (ஜூஸ்) இயற்கை பானம்
தேவையான பொருட்கள்
அகத்திக் கீரை. - ஒரு கைப்பிடி
வெள்ளைப் பூண்டு. - 5 பல்
தேங்காய்ப் பால். - 200 மி.லி
மிளகுத் தூள். - அரைத் தேக்கரண்டி
தேன். - 3 தேக்கரண்டி
செய்முறை:
முதலில் தேவையான அளவு அகத்திக் கீரையை எடுத்து சுத்தப்படுத்திக் கொள்ளவும்.
சுத்தப்படுத்திய அகத்திக் கீரையை மிக்ஸியில் போட்டு அதனுடன் பூண்டு பல் மற்றும் மிளகுத் தூளைச் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து ஜூஸாக்கி வடிகட்டி சாறு எடுக்கவும்.
வடிகட்டிய சாறுடன் தேங்காய்ப் பால் , தேன் சேர்த்து நன்கு கலக்கி குடிக்கவும்.
தேவைப்பட்டால் நாட்டுச் சர்க்கரையும் சேர்த்து கலந்து குடிக்கலாம்.
சாப்பிடும் முறை:
வாரம் மூன்றுநாட்கள் என நோயின் தன்மையறிந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வரவும்.
இந்த இயற்கை பானம் தீராத குடற்புண்ணையும் குணப்படுத்த உதவும்.
வாய்ப்புண் மற்றும் வாய்துர்நாற்றத்தைப் போக்க உதவும் இயற்கை பானம்.
கண் சார்ந்த குறைபாடுகளுக்கு நல்ல தீர்வைத் தரக்கூடிய இயற்கை பானம்.
செரிமான சக்தி குறைவாக உள்ளவர்கள்
செய்முறையில் தேங்காய்ப் பாலுக்கு பதிலாக தண்ணீர் சேர்த்து அருந்தலாம்.
இரவு படுக்கப் போகும் முன்:
வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.
குறிப்பு:
அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும்.
பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும்
வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும்
பயன்படுத்தவும்.
KOVAI NATURAL & HERBAL CENTER
(Natural & Yoga Therapeutic Centre)
FOOD CONSULTANCY CENTER
கோவை பாலா ,
இயற்கை மருத்துவம் மற்றும் உணவு வழி(காய்கறி) மருத்துவ ஆலோசகர்.
Cell : 96557 58609 , 75503 24609
Kovai Bala YouTube channel :
https://www.youtube.com/channel/UC8OPbuqkQl4C63ITOCQ1apQ
Thanks for:
Google and Kovai Bala Ayya
Old Post:
வெண்பூசணிச் சாறு (ஜூஸ்)
https://guruarull.blogspot.com/2021/09/blog-post.html
அன்னாசிப் பழச் சாறு ( ஜூஸ்)
https://guruarull.blogspot.com/2021/09/blog-post_20.html
கேரட் சாறு (ஜூஸ்) இயற்கை பானம்
https://guruarull.blogspot.com/2021/09/blog-post_21.html
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
வலைப்பதிவைப் படித்ததற்கு நன்றி!💐💐💐
https://guruarull.blogspot.com/



No comments:
Post a Comment