Wednesday, 22 September 2021

பப்பாளிப் பழச் சாறு ( ஜூஸ்)

இன்றைய காய்கறி மருத்துவ சிந்தனை

அனைத்து உள்ளங்களுக்கும் இனிய வணக்கங்கள்.


காயமே (உடலே) மருத்துவர் !!

                    காய்கறிகளே மருந்து !!!


உணவை மருந்தாக்கு !!

            மருந்தை உணவாக்காதே !!!


கீரைகள்  " நடமாடும் சித்தர்கள் " 



 

கல்லீரலின் செயல்திறனை அதிகரிக்கவும் , 

சீராக இயக்கவும் உதவும் பானம் !


ஜீரண சக்தியை அதிகரிக்க உதவும் பானம் !!

வயிற்றில் உள்ள புழு மற்றும் பூச்சிகளை வெளியேற்ற உதவும் பானம் !!!

குடற்புண் உள்ளவர்கள் அளவாக எடுத்துக் கொள்ளவும் !!!!


சர்க்கரை நோயாளிகள் 100 மி.லி வீதம் வாரம் மூன்று எடுத்துக் கொள்ளவும் !!!!!

மற்ற அனைவருக்கும் ஏற்ற ஆரோக்கிய இயற்கை பானம் !!!!!!


| பப்பாளிப் பழச் சாறு ( ஜூஸ்) |



சரும ஆரோக்கியம்

பப்பாளி ஜூஸ் குடிப்பதால் சருமத்தில் பொலிவு அதிகரிக்கும். மென்மையானதெளிவான சருமத்தைப் பெறுவீர்கள்.

இதில் பப்பைன் என்னும் வேதிப்பொருள் இருப்பதால் அது இயற்கையாகவே இறந்த செல்களை நீக்கி சருமத்தை பழுதுபார்க்கும். எனவே வயதான தோற்றத்தை தவிர்க்கவும் பப்பாளி ஜூஸ் உதவுகிறது.



சிறுநீரக பிரச்சனைகள்

தினமும் பப்பாளி ஜூஸை குடித்து வருவதன் மூலம் சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப் பாதை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்கலாம்.



புற்றுநோய்

பப்பாளியில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இது புற்றுநோய்களை உண்டாக்கும் டாக்ஸின்களை 

குடலில் இருந்து நீக்க உதவுகிறது. ஆகவே தினமும் பப்பாளி ஜூஸ் குடிப்பதன் மூலம் குடல் 

புற்று நோய் ஏற்படுவதை தடுக்கலாம்.



வயிற்று பிரச்சனைகள்

பப்பாளி ஜூஸை அன்றாடம் உணவில் சேர்த்து வந்தால் படர்தாமரை, அல்சர், வயிற்று பிரச்சனைகள்

பைல்ஸ், சரும அரிப்புக்கள் போன்றவற்றில் இருந்து விலகி இருக்கலாம்.





உயர் இரத்த அழுத்தம்

பப்பாளி பழத்தை தினமும் ஜூஸ் போட்டு குடித்து வர அதில் இருக்கும் சத்துக்கள், இரத்த நாளங்களில் ஏற்படும் அதிக அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.



பக்கவாதம்

பக்கவாத நோய்க்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் ஜூஸ் வகையில் ஒன்றாக பப்பாளி ஜூ ஸ் உள்ளது . இதை நாம் அடிக்கடி குடிப்பதன் மூலம் பக்கவாதம் வருவதைத் தடுக்கலாம்.



சதை

தொண்டை சதையால் பாதிக்கப்பட்டவர்கள் ஓரளவு பழுத்த பப்பாளியை அரைத்து ஜூஸ் செய்து தேன் கலந்து குடித்து வர குணமாகும்.



டாக்ஸின்

உடலில் உள்ள தேவையற்ற டாக்ஸின்களை வெளியேற்ற தினமும் பப்பாளி ஜூஸ் குடிப்பது சிறந்தது.



நுரையீரல்

தினமும் பப்பாளி ஜூஸை குடித்து வந்தால் நுரையீரலில் இருக்கும் அழுக்குகள் மற்றும் காயங்கள் நீக்கப்பட்டு நுரையீரல் பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்கலாம்.



செரிமானம்

பப்பாளியில் அதிக அளவில் இருக்கும் நார்ச்சத்து, செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. மேலும் மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இப்பழத்தின் ஜூஸ் குடிப்பதின் மூலம் நல்ல மாற்றத்தை பெறலாம்.



பொலிவான முகம்

தினமும் பப்பாளி ஜூஸ் குடித்து வந்தால்சருமத்தின் பொலிவு மேம்படும்மேலும் முகப்பரு ஏற்படுவதை தடுக்கலாம்.

ஏனெனில் இதில் உள்ள பாப்பைன் என்னும் மூலப்பொருள் இறந்த செல்களை வெளியேற்றி சரும அழகை அதிகரிக்க உதவுகிறதுஇனி பப்பாளி ஜூஸ் எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.


குறிப்பு:

அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து   உணவாக சாப்பிட்டு வரவும்
பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும்

வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும்

பயன்படுத்தவும்.



Watch Youtube link:

https://youtu.be/EVjbSx83R7I


--------------------------------------------------------------------------------------------------------------------------------


KOVAI NATURAL & HERBAL CENTER

(Natural & Yoga Therapeutic Centre)

FOOD CONSULTANCY  CENTER


கோவை பாலா ,

இயற்கை மருத்துவம் மற்றும் உணவு வழி(காய்கறி) மருத்துவ ஆலோசகர்.

Cell  :  96557 58609   ,  75503 24609

    

Kovai Bala YouTube channel :

https://www.youtube.com/channel/UC8OPbuqkQl4C63ITOCQ1apQ


Thanks for:

Google and Kovai Bala Ayya



Old Post:

வெண்பூசணிச் சாறு (ஜூஸ்)

https://guruarull.blogspot.com/2021/09/blog-post.html


அன்னாசிப் பழச் சாறு ( ஜூஸ்)

https://guruarull.blogspot.com/2021/09/blog-post_20.html



கேரட் சாறு (ஜூஸ்) இயற்கை பானம்

https://guruarull.blogspot.com/2021/09/blog-post_21.html


அகத்திக் கீரைச் சாறு (ஜூஸ்) இயற்கை பானம்

https://guruarull.blogspot.com/2021/09/blog-post_22.html



----------------------------------------------------------------------------------------------------------------------------------------

வலைப்பதிவைப் படித்ததற்கு நன்றி!💐💐💐


https://guruarull.blogspot.com/


No comments:

Post a Comment