அனைத்து உள்ளங்களுக்கும் இனிய வணக்கங்கள்.
காயமே (உடலே) மருத்துவர் !!
காய்கறிகளே மருந்து !!!
உணவை மருந்தாக்கு !!
மருந்தை உணவாக்காதே !!!
கீரைகள் " நடமாடும் சித்தர்கள் "
தலைப்பு : நரம்புத் தளர்ச்சியை முற்றிலும் குணப்படுத்த உதவும் சூரணம்
பொன்னாங்கண்ணிக் கீரை ரோஜாப் பூ சூரணம்
தேவையான பொருட்கள்:
பொன்னாங்கண்ணிக் கீரை - 150 கிராம்
ரோஜாப் பூ இதழ்கள் - 150 கிராம்
செம்பருத்திப் பூ இதழ்கள். - 150 கிராம்
ஆவாரம் பூ. - 150 கிராம்
கொன்றைப் பூ. - 150 கிராம்
செய்முறை:
முதலில் மேற்கூறிய அளவு பொன்னாங்கண்ணிக் கீரை , ரோஜாப் பூ , செம்பருத்திப் பூ , ஆவாரம் பூ மற்றும் கொன்றைப் பூ ஆகியவற்றை எடுத்து நன்கு சுத்தப்படுத்தி மிதமான வெயிலில் நன்கு உலர வைக்கவும்.
நன்கு உலர்ந்தப் பின்பு ஒவ்வொன்றையும் தனித்தனியாக அரைத்து அனைத்தையும் ஒன்றாகக் கலந்து சலித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பயன்கள்:
இந்த சூரணம் நரம்புத் தளர்ச்சி மற்றும் ஆண்மைக் குறைபாடுகளை பூரணமாக தீர்க்க உதவும் அருமருந்தாகும்.
மேற்கூறிய குறைபாடுகளால் துன்பப்படுபவர்கள் மேற்கூறிய சூரணத்தை ஐந்து கிராம் அளவு எடுத்து இரவு உணவிற்குப் பிறகு சுடுநீரில் கலந்து குடிக்கவும்.
இத்துடன் மறக்காமல் ஒரு டம்ளர் அளவு சுடுபால் அருந்த வேண்டும்.
நீங்கள் எடுத்துக் கொண்டியிருக்கிற மருந்துகளோடு இதனை எடுத்துக் கொள்ளலாம்.
இரவு படுக்கப் போகும் முன்:
வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.
குறிப்பு
அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும்.
பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும்
வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும்
பயன்படுத்தவும்.
KOVAI NATURAL CURE
(Natural & Yoga Therapeutic Centre)
FOOD CONSULTANCY CENTRE
கோவை பாலா ,
இயற்கை மருத்துவம் மற்றும் உணவு வழி(காய்கறி) மருத்துவ ஆலோசகர்.
Cell : 96557 58609 , 75503 24609
Email : Covaibala15@gmail.com
Kovai Bala YouTube channel :
https://www.youtube.com/channel/UC8OPbuqkQl4C63ITOCQ1apQ
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
வலைப்பதிவைப் படித்ததற்கு நன்றி!💐💐💐
Old Posts:
வெண்பூசணிச் சாறு (ஜூஸ்)
https://guruarull.blogspot.com/2021/09/blog-post.html
அன்னாசிப் பழச் சாறு ( ஜூஸ்)
https://guruarull.blogspot.com/2021/09/blog-post_20.html
கேரட் சாறு (ஜூஸ்) இயற்கை பானம்
https://guruarull.blogspot.com/2021/09/blog-post_21.html
அகத்திக் கீரைச் சாறு (ஜூஸ்) இயற்கை பானம்
https://guruarull.blogspot.com/2021/09/blog-post_22.html
Visit For:
https://guruarull.blogspot.com/



No comments:
Post a Comment