இன்றைய காய்கறி மருத்துவ சிந்தனை
காயமே (உடலே) மருத்துவர் !!
காய்கறிகளே மருந்து !!
உணவை மருந்தாக்கு !!
மருந்தை உணவாக்காதே !!!
கீரைகள் " நடமாடும் சித்தர்கள் "
தலைப்பு : முகத்தில் காணும் எண்ணெய் வழிச்சலை நீக்கவும் , முகம் பொலிவடையவும் மற்றும் தோல் மினுமினுப்பாக மாறவும் உதவும் இயற்கை பானம்
கேரட் சாறு (ஜூஸ்) இயற்கை பானம்
தேவையான பொருட்கள்
கேரட். - 150 கிராம்
தேங்காய்ப் பால். - 100 மி.லி
கொத்தமல்லித் தழை. - 100 கிராம்
நாட்டுச் சர்க்கரை. - தேவையான அளவு
செய்முறை:
முதலில் தேவையான அளவு கேரட் மற்றும் கொத்தமல்லித் தழையை எடுத்து சுத்தப்படுத்திக் கொள்ளவும்.
தேங்காய் தேவையான அளவு எடுத்துக் கொள்ளவும்.
பின்பு ஒவ்வொன்றையும் தனித்தனியாக அரைத்து சாறாக எடுத்துக் கொள்ளவும்.
சாறாக எடுத்தப் பின்பு மூன்றையும் ஒன்றாகக் கலந்து தேவையான அளவு நாட்டுச் சர்க்கரை அல்லது தேன் கலந்து குடிக்கவும்.
சாப்பிடும் முறை:
காலையில் வெறும் வயிற்றில் குடித்து வரவும்.
பயன்கள்:
இந்த இயற்கை பானம் முகத்தில் வழியும் எண்ணெய் வழிச்சலை நீக்க உதவும் பானம்.
முகத்தை பொலிவாக வைத்துக் கொள்ள உதவும் பானம்.
தோலை மினுமினுப்பாக வைத்துக் கொள்ள உதவும் பானம்.
கண் பார்வைக்கு சக்தியை அளிக்க உதவும் பானம் .
வயிற்று எரிச்சல் மற்றும் வாயுக் கோளாறுகளை நீக்க உதவும் பானம்.
குடல் புண்ணை அதிசயமாக குணமாக்க உதவும் பானம்.
புற்றுநோய் செல்களை அழிக்கும் ஆற்றல் நிறைந்த இயற்கை பானம்.
இரவு படுக்கப் போகும் முன்:
வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.
குறிப்பு
அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும்.
பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
KOVAI NATURAL & HERBAL CENTER
(Natural & Yoga Therapeutic Centre)
FOOD CONSULTANCY CENTER
கோவை பாலா ,
இயற்கை மருத்துவம் மற்றும் உணவு வழி(காய்கறி) மருத்துவ ஆலோசகர்.
Cell : 96557 58609 , 75503 24609
Email ID: Covaibala15@gmail.com
Kovai Bala YouTube channel :
https://www.youtube.com/channel/UC8OPbuqkQl4C63ITOCQ1apQ
https://t.me/kovaibalavegetableclinic
Thanks for
google.com and Kovai Bala ayya
old post:
வெண்பூசணிச் சாறு (ஜூஸ்)
https://guruarull.blogspot.com/2021/09/blog-post.html
அன்னாசிப் பழச் சாறு ( ஜூஸ்)
https://guruarull.blogspot.com/2021/09/blog-post_20.html
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
வலைப்பதிவைப் படித்ததற்கு நன்றி!💐💐💐



No comments:
Post a Comment