அகத்தியம்
அனைத்து உள்ளங்களுக்கும் இனிய வணக்கங்கள்.
மிகப் பழமையான தமிழ் இலக்கண நூல் எனக் கருதப்படுகின்றது. அகத்தியர் என்பவர் இயற்றிய நூலாதலால், இது அகத்தியம் என்று வழங்கப்படுகின்றது. முதல், இடை, கடை என வரையறுக்கப்படும் முச்சங்க காலங்களிலும் இதுவே, தமிழ் இலக்கணத்துக்கான, முதல் நூலாகத் திகழ்ந்தது என்று ஆய்வாளர் கருதுகின்றனர்.
அகத்தியம் 12000 நூற்பாக்களைக் கொண்டிருந்தது. எழுத்து, சொல், பொருள், யாப்பு, அரசியல், அமைச்சியல், பார்ப்பனவியல், சோதிடவியல் முதலான இயல்களை அகத்தியம் கொண்டிருந்தது.
சான்று:முனைவர் பாக்யமேரி, வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு,NCBH வெளியீடு,சென்னை-98,முதற்பதிப்பு-ஜூலை-2008. இந்த நூற்பாக்கள் என்றார் அகத்தியனார் என்பது அகத்தியம் என்பனவற்றில் ஒன்றைப் பெற்று முடிகின்றன.
அகத்தியம்
அ - அ
க்+அ - க
த் - த்
த்+இ - தி
ய்+அ - ய
ம். - ம்
வேற்றுமையுருபு ஏற்றல்
அகத்தியம் + ஐ - அகத்தியத்தை
அகத்தியம் + ஆல் - அகத்தியத்தால்
அகத்தியம் + ஓடு - அகத்தியத்தோடு
அகத்தியம் + உடன் - அகத்தியத்துடன்
அகத்தியம் + கு - அகத்தியத்துக்கு
அகத்தியம் + இல் - அகத்தியத்தில்
அகத்தியம் + இருந்து - அகத்தியத்திலிருந்து
அகத்தியம் + அது - அகத்தியத்தது
அகத்தியம் + உடைய - அகத்தியத்துடைய
அகத்தியம் + இடம் - அகத்தியத்திடம்
அகத்தியம் + (இடம் + இருந்து) - அகத்தியத்திடமிருந்து
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
வலைப்பதிவைப் படித்ததற்கு நன்றி!💐💐💐
Visit the blog:
https://guruarull.blogspot.com/


No comments:
Post a Comment