இன்றைய காய்கறி மருத்துவ சிந்தனை
அனைத்து உள்ளங்களுக்கும் இனிய வணக்கங்கள்.
காயமே (உடலே) மருத்துவர் !!
காய்கறிகளே மருந்து !!!
உணவை மருந்தாக்கு !!
மருந்தை உணவாக்காதே !!!
கீரைகள் " நடமாடும் சித்தர்கள் "
தலைப்பு :
மூட்டு வலி மற்றும் மூட்டு வீக்கத்தப் போக்க உதவும் இயற்கை காய்கறி பானம்
முட்டைக்கோஸ் சாறு (ஜூஸ்) இயற்கை பானம்
தேவையான பொருட்கள்:
பொடியாக நறுக்கிய முட்டைக்கோஸ் - 50 கிராம்
காரட் துருவல். - 50 கிராம்
மிளகுத் தூள். - கால் தேக்கரண்டி
சீரகத் தூள். - கால் தேக்கரண்டி
ஏலக்காய்த் தூள். - கால் தேகாகரண்டி
உப்பு. - தேவையான அளவு
செய்முறை :
முதலில் தேவையான அளவு முட்டைக்கோஸ் மற்றும் கேரட் ஆகியவற்றை எடுத்து சுத்தப்படுத்திக் கொள்ளவும்.
அதனை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பின்பு அதனை மிக்ஸியில் போட்டு அதனுடன் மிளகுத் தூள் , சீரகத் தூள் , ஏலக்காய்த் தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைத்து ஜூஸாக்கிக் கொள்ளவும்.
பின்பு அதனை வடிகட்டி அதில் தேவைப்பட்டால் சிறிது உப்பு சேர்த்துக் கலந்து குடிக்கவும்.
சாப்பிடும் முறை:
தினமும் ஒருவேளை காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம்.
பயன்கள்:
இந்த இயற்கை பானம் தீராத மற்றும் நாட்டுபட்ட மூட்டு வலிக்கு நிவாரணத்தை கொடுக்க உதவும்.
மூட்டு வீக்கத்தைப் போக்க உதவும் பானம்.
கண் சார்ந்த குறைபாடுகளைப் போக்க உதவும் பானம்.
உடலில் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்க உதவும் பானம்.
இரவு படுக்கப் போகும் முன்:
வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.
குறிப்பு:
அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும்.
பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும்
வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும்
பயன்படுத்தவும்.
KOVAI NATURAL & HERBAL CENTER
(Natural & Yoga Therapeutic Centre)
FOOD CONSULTANCY CENTER
கோவை பாலா ,
இயற்கை மருத்துவம் மற்றும் உணவு வழி(காய்கறி) மருத்துவ ஆலோசகர்.
Cell : 96557 58609 , 75503 24609
Email ID: Covaibala15@gmail.com
Kovai Bala YouTube channel :
https://www.youtube.com/channel/UC8OPbuqkQl4C63ITOCQ1apQ
https://t.me/kovaibalavegetableclinic
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
Kovai Bala YouTube channel :
https://www.youtube.com/channel/UC8OPbuqkQl4C63ITOCQ1apQ
https://t.me/kovaibalavegetableclinic
Old Post:
வெண்பூசணிச் சாறு (ஜூஸ்)
https://guruarull.blogspot.com/2021/09/blog-post.html
அன்னாசிப் பழச் சாறு ( ஜூஸ்)
https://guruarull.blogspot.com/2021/09/blog-post_20.html
கேரட் சாறு (ஜூஸ்) இயற்கை பானம்
https://guruarull.blogspot.com/2021/09/blog-post_21.html
அகத்திக் கீரைச் சாறு (ஜூஸ்) இயற்கை பானம்
https://guruarull.blogspot.com/2021/09/blog-post_22.html
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
வலைப்பதிவைப் படித்ததற்கு நன்றி!💐💐💐




No comments:
Post a Comment